புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என்ன நடிப்பு? நீலி கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. கரிகாலனை பதம் பார்த்த சக்தி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவரும் எதிர்பார்த்த படி தற்போது அந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள் துணிச்சலாகவே குணசேகரனுக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் எல்லாரையும் மிஞ்சும் அளவிற்கு ஒவ்வொரு வார்த்தைகளிலும் குணசேகரனை தாக்கி பேசுவதில் ரேணுகாவை அடிச்சுக்க யாரும் இல்லை. தற்போது வரும் எபிசோடுகளில் இவர்தான் மிகப்பெரிய ஹைலட்டாக விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறார்.

குணசேகரனுக்கு ஏதோ மனதில் பயம் ஏற்பட்டதால் சத்தியம் பண்ண சொல்லி கேட்கிறார் அதற்கு ரேணுகா மனதில் இருந்த பாரத்தை எல்லாம் கொட்டி தீர்க்கும் விதமாக குணசேகரனை வச்சு செதுக்கி விட்டாங்க. திருப்பி குணசேகரனால் எதுவும் சொல்ல முடியாமல் சத்தியமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று ஓடிப் போய்விட்டார்.

Also read: ஒட்டு மொத்த குடும்பத்தையும் லாக் செய்யும் குணசேகரன்.. அருண் கதை இதோடு முடிஞ்சது போல

இனிமேல் ஒவ்வொரு மருமகளும் இதே மாதிரி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு பேச ஆரம்பித்தால் இருக்கும் இடம் தெரியாமலே போய் விடுவார். அடுத்ததாக குணசேகரன் அவருடைய நீலி கண்ணீரை காட்டி எப்படியாவது ஞானத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று டிராமா பண்ணுகிறார். இதற்கு மேலேயும் ஞானம் திருந்தாமல் குணசேகரன் இடம் போய் சேர்ந்தால் இவரை விட வடிகட்டின முட்டாள் யாரும் இருக்க முடியாது.

ஆனால் ஞானம் அப்படி பண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை. ரொம்பவே அடிபட்டுட்டாரு அதனால ஓரளவு அவருக்கு ஞானம் பிறந்திருக்கும். ஆனாலும் குணசேகரன் எப்படியாவது தான் நினைத்தபடி ஆதிரை கரிகாலன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று எல்லா தில்லாலங்கடி வேலையும் பண்ண தயாராக இருக்கிறார்.

Also read: ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.. சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் ஒட்டு மொத்த குடும்பம்

அடுத்ததாக கரிகாலன், இவருடைய நண்பர் போனில் இருக்கும் அருணை பார்த்துவிட்டு எல்லாரும் முன்னாடியே ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு அனைவரும் சேர்ந்து அவரைத் தேடும் பணியில் இறங்கி விட்டார்கள். கரெக்டா அவங்க டீ குடிக்கும் இடத்தில் போய் விசாரித்து அவர்கள் பக்கத்தில் தான் தங்கி இருக்கிறார்கள் என்பதை மோப்பம் பிடித்து விட்டான்.

ஆனால் பாவம் கடைசியில் கரிகாலன் கை உடைந்து கதறிக் கொண்டு வருகிறார். கண்டிப்பாக கௌதம் இதற்கு இடையில் புகுந்து கரிகாலன் மற்றும் கதிரையும் உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பான். இல்லை என்றால் சக்தி, அருணை பார்க்க விடாமல் ஏதாவது செய்து கரிகாலனை தடுத்து இருக்க வேண்டும். எது எப்படியோ எல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சு அருண் இங்குதான் இருக்கிறான் என்று. அருணை தேடி அரசுவும் இவருடைய இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். பார்க்கலாம் வரப் போற எபிசோடுகளில் எந்த மாதிரி ட்விஸ்ட் இருக்கிறது என்று.

Also read: கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு சென்ற கதிர்.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News