புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

Ethirneechal Gunasekaran: கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார் இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து. ஆனால் அப்போதெல்லாம் இவர் யார் என்று கூட யாருக்கும் தெரியாத நிலைமையில் தான் இவருடைய ரேஞ்ச் இருந்தது. எப்பொழுது எதிர்நீச்சல் நாடகத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தாரோ அப்பொழுது அனைவருக்கும் பிரபலமாகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து தேடிக் வருகிறது. அந்த அளவிற்கு ட்ரெண்ட் ஆகிவிட்டார். மேலும் எதிர்நீச்சல் சீரியலில் நக்கல், நையாண்டி மற்றும் வில்லத்தனமான பேச்சை கொடுத்து அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதனால் இவருடைய புகழ் நாலா பக்கமும் ஓங்கி விட்டது. தற்போது புகழின் எல்லைக்கு போனதால் என்னமோ பொது இடத்திலும் இவருடைய பேச்சு கொஞ்சம் துடுக்களாகவே இருந்து வருகிறது.

Also read: அப்பத்தாவை வைத்து குணசேகரன் போடும் திட்டம் பலிக்குமா.? கொலைகாரன் கதிருக்கு ஜனனி வைக்கும் செக்

அந்த வகையில் யார் எவர் என்று கூட பார்க்காமல் மட்டு மரியாதையில்லாமல் மற்றவர்களை ஈசியாக பேசி விடுகிறார். இதில் தற்போது விஜய்யின் அப்பாவையும் சீண்டிப் பார்க்கும் அளவிற்கு ஓவர் மமதையில் பேசியிருக்கிறார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஏசி நடித்து வருகிறார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் எதிர்நீச்சல் குணசேகரனை தான் தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் இவர் முழுக்க முழுக்க எதிர்நீச்சல் சீரியலில் மட்டும் கவனம் செலுத்துவதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதை ஒரு பேட்டியில் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரம், போனா போச்சுன்னு விட்டுக் கொடுத்து விட்டேன். அதில் தான் தற்போது எஸ்ஏசி நடிக்கிறார் இன்று தலைக்கணத்தில் பொது இடத்தில் பேசி இருக்கிறார்.

Also read: அப்பத்தாவை ரூமில் அடைத்து கொடுமைப்படுத்தும் குணசேகரன்.. ஜீவானந்தத்திற்கு ஆதரவாக நிற்கும் மருமகள்

ஆனால் இவர் பேசியதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பிக் பாஸ் ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், குணசேகரனின் மண்டையில் ஒரு கொட்டு வைத்து உரைக்கும்படி பதில் கொடுத்து இருக்கிறார். அதாவது மாரிமுத்து பேசியது அனைத்தும் தவறானது. மேலும் இவர் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன் அதற்குத் தேர்வானவர்கள் பெரிய நடிகர்கள் தான்.

அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போனதினால் தான் தற்போது மாரிமுத்து, குணசேகரன் ஆக பரிச்சயமாக இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். அத்துடன் ஒரு சீனியர் நடிகராக இருந்து கொண்டு பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்ற இங்கீதம் கூட அவருக்கு தெரியவில்லை இது மிகவும் தவறான செயல் என்று கூறி இருக்கிறார். மேலும் தற்போது குணசேகரன் புகழின் போதையில் இருப்பதால் தலைக்கனத்தில் திமிராக சுற்றி வருகிறார் என்பது போல் தெரிகிறது.

Also read: அப்பத்தாவிடம் ருத்ர தாண்டவம் ஆடும் குணசேகரன்.. ஜீவானந்தம் குடும்பத்தைக் காப்பாற்றும் ஜனனி

Trending News