புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சித்தார்த்தை கச்சிதமாக தூக்கிய குணசேகரனின் தம்பி.. உமையாளுக்கே டஃப் கொடுத்த கதிர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், கதிர் போட்ட பிளான் படி சித்தார்த்தை தூக்கிவிட்டார். அதாவது மாப்பிள்ளை இருந்தால் தானே குணசேகரன் உமையாள் நினைத்தபடி தர்ஷினிக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பார். அவரையே நம்ம கடத்திட்டால் கல்யாணம் எப்படி நடக்கும் என்று கச்சிதமாக பிளான் போட்டு கதிர் காய் நகர்த்தி விட்டார்.

அந்த வகையில் கதிருக்கு துணையாக இருந்து உதவி செய்தது குணசேகரனின் வாரிசு. அதாவது தர்ஷன், அப்பா சொன்ன மாதிரி எல்லாத்தையும் தலையாட்டிக் கொண்டு கூடவே ஒட்டிக்கொண்டார். ஆனால் இது எல்லாம் கதிர் கொடுத்த பிளான் படி தான் தர்ஷன் காய் நகர்த்திருக்கிறார்.

எது எப்படியோ கதிர் செய்த காரியம் வெற்றியாக முடிந்து விட்டது. இதனை அடுத்து ஜனனியின் அம்மா மற்றும் தங்கையையும் காணவில்லை. இவர்களை உமையாள், ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி வைத்து தூக்கி விட்டார். ஏனென்றால் உமையாளுக்கு பொருத்தவரை இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும்.

இதில் எந்தவித தடங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அஞ்சனாவை கடத்திவிட்டார். கடைசியில் அஞ்சனாவும் இல்லை சித்தார்த்தும் இல்லை. ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு ஜனனி மற்றும் கதிர் முயற்சி எடுக்கப் போகிறார்கள்.

கதிர் செய்த உருப்படியான விஷயம்

அதன்படி சித்தார்த் மற்றும் அஞ்சனாவிற்கு கல்யாணம் நடந்துவிடும். இதில் குணசேகரனை விட டபுள் மடங்கு அராஜகம் பண்ணிய உமையாளுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டார் கதிர். ஆனால் இது எதுவுமே தெரியாமல் குணசேகரன், உமையாளிடம் மாப்பிள்ளை எங்கே என்று கேட்கிறார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உமையாள் முழித்துக் கொண்டு வருகிறார். பிறகு கீர்த்தியிடம் போய் சித்தார்த் எங்கே என்று கேட்கிறார். அதற்கு கீர்த்தி அவன் எங்கே என்று எனக்குத் தெரியாது போனும் போக மாட்டேங்குது என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் பதட்டமான உமையாள், குணசேகரியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பிபு போய் இருக்கிறார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கதிர் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைதியாக இருக்கிறார்.

ஆனால் கதிருக்கும் இதுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. இதில் மிகப்பெரிய ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்ற உண்மை நந்தினியின் ஏழாம் அறிவுக்கு எட்டிவிட்டது. எது எப்படியோ இப்பொழுது தான் இந்த நாடகம் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.

Trending News