புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மருமகளிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் குணசேகரனின் தம்பிகள்.. புது ட்விஸ்டுடன் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அண்ணன் இல்லாததால் அவர் ஆசைப்பட்டபடி ஒவ்வொருவரையும் வச்சு செய்ய வேண்டும் என்று குணசேகரின் தம்பிகள் வெறிகொண்டு வீட்டுக்கு திரும்புகிறார்கள். அப்பொழுது கதிர், முதலில் ஈஸ்வரியை தான் அடக்க வேண்டும். ரொம்பவே வாய் நீண்டு கொண்டு ஓவராக பேசுகிறார். அடுத்ததாக ஜீவானந்தம் வீட்டிற்கு தினமும் யாருக்கும் தெரியாமல் போய் பார்த்து பேசி வருகிறார்.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கதிர் சொல்கிறார். அத்துடன் ஞானமும் உன் பொண்டாட்டி என் பொண்டாட்டி எல்லாத்தையும் வாயை திறக்காத படி அடக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு கதிர், அண்ணன் ஆசைப்பட்ட மாதிரி கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் நான் அனைத்தையும் முடிக்கிறேன் என்று ஆவேசத்தில் பொங்குகிறார்.

அந்த நேரத்தில் கரிகாலன் அப்பத்தாவை முடிப்பதற்கு பிளான் பண்றேன்னு தெரிகிறது. அதுல என்னையும் கூட்டாளியாக சேர்த்துக்கோ. இந்த ஞான மாமாவை நம்பாதீங்க என்று கரிகாலன் சொல்கிறார். இத்தனை நாளாக காமெடி பீஸ் ஆகவும், கோமாளித்தனமாக இருந்த கரிகாலன் தற்போது குணசேகரன் இல்லாததால் வில்லனாக மாறி கொண்டு வருகிறார்.

இப்படி குணசேகரன் இல்லாததால் தம்பிகளை வைத்து இனி கதை நகர இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது குணசேகரன் வீட்டில் இருந்த பெண்கள் துணிச்சலுடனும், சாதிக்க வேண்டும் வெறியுடனும் இருப்பதால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எல்லாத்துக்கும் துணிந்து போராட முடிவு எடுத்து விட்டார்கள். அதிலும் ஜனனி அப்பா ரொம்பவே அவமானப்படுத்தியதால் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று சபதத்துடன் இருக்கிறார்.

அந்த வகையில் இனி பெண்களின் ராஜ்ஜியம் ஓங்கி நிற்கப் போகிறது. அத்துடன் இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாக தவிக்கப் போவது குணசேகரனின் தம்பிகள் தான். ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவிக்கப் போகிறார்கள். இனி இந்த மாதிரி டிராக்கை மாற்றி அமைத்து நாடகத்தை சுறுசுறுப்பாக கொண்டு வர இருக்கிறார்கள்.

அதற்கு காரணம் புது குணசேகரன் கேரக்டர் செல்லுபடி ஆகாததால், அந்த வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து மக்கள் மனதில் இடம் பிடிக்கப் போகிறார்கள். அதனால் இனி ஒவ்வொரு நாளும் சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு கதை இருக்கப் போகிறது. அத்துடன் இவர்களுடன் சேர்ந்து ஜீவானந்தமும் அவருடைய ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

Trending News