புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரனின் ஒட்டுமொத்த ஆட்டமும் அடங்கும் நேரம் வந்தாச்சு.. கோமாவில் இருந்து எழுந்து வரும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் போட்ட பிளான் படி சித்தார்த் மற்றும் தர்ஷினியை மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விட்டார். அத்துடன் உமையாளின் குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிய பிறகும் பிடிவாதமாக கல்யாணத்தை நடத்துவதற்கு உமையாள் மும்மரமாக இருக்கிறார்.

அந்த வகையில் இந்த கல்யாணத்தை நடத்துவதற்கு ஐயரும் வந்து விட்டார். ஆனால் இந்த ஐயர் மூலமாகத்தான் குணசேகரனுக்கு மிகப்பெரிய ஆப்பு தயாராக போகிறது. இதற்கிடையில் குற்றவையிடம் குணசேகரனின் நான்கு மருமகள்களும் வழக்கம் போல் புலம்பிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த நேரத்தில் சக்தி போன் பண்ணி சித்தார்த் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை. அவனை ராமசாமி வந்து கூட்டி போயிட்டார். அதனால் தர்ஷினியை பாதுகாப்பாக பார்த்துக் கொள் என்று சொல்கிறார். அதற்கு ஜனனி, தர்ஷினி இப்பொழுது வீட்டில் இல்லை. குணசேகரன் எங்கேயோ கூட்டிட்டு போய்விட்டார் என்று புலம்புகிறார்.

செல்லா காசாக நிற்கப் போகும் குணசேகரன்

இதனை தொடர்ந்து இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக குற்றவை மூலம் நான்கு மருமகள்கள் போராடப் போகிறார்கள். ஆனால் ஜீவானந்தம், தர்ஷினிக்கு கொடுத்த ஐடியா மூலம் விவேகத்துடன் செயல்பட்டு தர்ஷினியை இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவார்.

அத்துடன் இவ்வளவு நாளாக அராஜகத்தின் உச்சகட்டமாக அட்டூழியங்களை பண்ணி வந்த குணசேகரனுக்கு தற்போது ஒட்டு மொத்த ஆட்டமும் அடங்கும் வகையில் தரமான சம்பவத்தை குணசேகரனின் வாரிசுகள் செய்யப் போகிறார்கள். இதற்கு பின்னணியில் இருந்து பக்கபலமாக இருக்கப் போவது ஜீவானந்தம் மற்றும் அப்பத்தா.

இதனால் இந்த நாடகம் பழைய மாதிரி மக்களின் விருப்பப்படி சுவாரஸ்யமாக அமையப் போகிறது. இதுவரை ஜீவானந்தம் கோமாவில் இருந்தது போல் கதையை எப்படியோ சொதப்பிவிட்டார். ஆனால் தற்போது இப்படியே போனால் மொத்த பேரும் கெட்டுவிடும் என்பதால் கோமாவில் இருந்து எழுந்து விட்டார்.

அந்த வகையில் குணசேகரன் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். மேலும் பெண்கள் வெறும் வீட்டு வேலைக்கு மட்டும் தான் லாய்க்கு என்று நினைத்ததை பொய்யாக்கும் வகையில் நான்கு மருமகள்களும் ஆசைப்பட்ட மாதிரி இனி சொந்த காலில் ஜெயிப்பதற்கு முயற்சி பண்ணப் போகிறார்கள். அதற்கு முதற்கட்ட பிள்ளையார் சுழி தான் தர்ஷினியின் கல்யாணத்தை நிறுத்தி குணசேகரனை செல்லாக் காசாக ஆக்கப் போகிறார்கள்.

Trending News