Ethirneechal Gunasekaran: சன் டிவியில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் சில சீரியல்களை மறக்கவே முடியாது. அப்படி தான் சமீபத்தில் முடிந்து போன எதிர்நீச்சல் சீரியல் இன்னும் வரை மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் வரும் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம் கதை ஒரு பக்கமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடித்த ஆர்ட்டிஸ்ட்களின் நடிப்பும் எதார்த்தமான கேரக்டரும் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்து விட்டது. படித்த பெண்களை தேடிப் பிடித்து மருமகள்களாக கூட்டிட்டு வந்து அவர்களை அடிமையாகி அடுப்பாங்கறையிலேயே போட்டு ஆணாதிக்கத் திமிரை காட்டிய குணசேகரன்.
கிளாமர் லுக்கில் வெளிவந்த புகைப்படம்
இவருடைய முட்டாள்தனமான சிந்தனையை அகற்றி அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைத்த மருமகள்கள் சொந்தக்காலில் நின்னு ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்கு முட்டுக்கட்டை போட்டு குடும்பம் என்றால் இப்படித்தான் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று குணசேகரன் அவர்களை அடக்கி வந்தார். அதிலும் ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி மற்றும் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி ரொம்பவே கஷ்டப்பட்டு பல இன்னல்களை சந்தித்தார்.
தற்போது சீரியல் முடிந்ததும் சுதந்திர பறவை போல் பறக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அடுத்து எந்த பட வாய்ப்புகளும் சீரியல்களும் இல்லாததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார். அரைகுறை ஆடையில் கிளாமர் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு அவ்வப்போது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அதாவது ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த கனிகா, அஜித்துடன் வரலாறு, பைவ் ஸ்டார், மாதவனுடன் எதிரி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்டவர் எதிர்நீச்சலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் இவருக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி கிளாமர் டிரஸ்ஸை போட்டு கவர்ச்சிகரமான போட்டோக்களை எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி குணசேகரன் கட்டிக் காத்து வைத்த மானத்தை இப்படி காற்றில் பறக்க விட்டு வருகிறீர்களே ஈஸ்வரி என்று நக்கலாக கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆடிய ஆட்டம்
- ஒரிஜினல் குணசேகரனை டம்மியாக்கிய ஜீவானந்தம்
- Gunasekaran: ரேணுகா மனக்கஷ்டத்தை போக்கிய சர்வாதிகாரி
- மொத்த சேனலையும் தூக்கி சாப்பிட்ட சன் டிவி சீரியல்