செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்துக்கு முடிவு கட்டிய அப்பத்தா.. மொத்த பிளானையும் சொதப்பிய தோழர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது விறுவிறுப்பாக திருவிழா நிகழ்ச்சிக்கு வந்துவிட்டது. இதில் குணசேகரன் ஆசைப்பட்ட மாதிரி முதல் மரியாதை கிடைத்து விட்டது. அத்துடன் ஈஸ்வரியின் பதட்டமும் குறைந்துவிட்டது. எங்கே ஜீவானந்தம் சொன்ன மாதிரி குணசேகரன் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்று பயத்தில் இருந்தார்.

ஆனால் குணசேகரனின் வாரிசுகள் ஜீவானந்தத்தை அப்பா என்று உருக்கமாக பேசி மனதை மாற்றி விட்டார்கள். அதனால் ஜீவானந்தமும் ஈஸ்வரிடம் என்னால் உங்க வீட்டுக்காரருக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் அப்பத்தா நாளை நடத்தும் நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் அதில் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன் என்று கூறுகிறார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரிடம் பேசிவிட்டு போகும் பொழுது குணசேகரன் ஜீவானந்தத்தை பார்த்து விடுகிறார். அது மட்டுமில்லாமல் வெண்பாவை பார்த்து பேசும் போது ஈஸ்வரியை அம்மா என்று கூப்பிடுவதையும் நோட் பண்ணி குதர்க்கமாக குணசேகரன் பேசுகிறார். இதற்கு இடையில் கௌதம் கதிரை குறி வைத்ததும் சொதப்பலாக முடிந்து விட்டது.

Also read: ஜீவானந்தத்தை அப்பாவாக ஏற்றுக் கொண்ட குணசேகரனின் வாரிசு.. மொத்த கதையும் வேறு எங்கேயோ திரும்புது

அடுத்தபடியாக அப்பத்தா ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். அப்பொழுது அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் உள்ளே நுழைகிறார்கள். இதில் தான் அப்பத்தா அவருடைய 40% சொத்தை என்ன செய்யப் போகிறாய் என்ற உண்மையை சொல்லப் போகிறார். ஆனால் இவ்வளவு நாளாக எப்படியாவது அப்பத்தா வைத்திருக்கும் சொத்தை ஆட்டைய போடலாம் என்று கனவு கோட்டை கட்டி இருந்தார் குணசேகரன்.

அதை மொத்தமாக காலி பண்ணும் விதமாக அப்பத்தா நல்ல காரியங்களுக்கு அதை எழுதி வைக்கப் போகிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் குணசேகரன் மர்ம நபர் மூலம் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை காலி பண்ணுவதற்கு முடிவு பண்ணி இருக்கிறார். இதுல அப்பத்தா வேற சொத்து கொடுக்கவில்லை என்றால் உடனே அப்பத்தாவிற்கு முடிவு கட்டிவிடுவார்.

ஆனால் இந்த ஒரு சம்பவத்தில் யாரு உயிர் போகப் போகிறது என்பது தான் யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருவரும் மறைமுகமாக ஒவ்வொருவரையும் டார்கெட் செய்து குறி வைக்கிறார்கள். இதில் யார் பலிகாடாக சிக்க போகிறார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

Also read: சக்தியிடம் பொட்டி பாம்பாக அடங்கிய ஜான்சி.. குணசேகரனை அலேக்கா தூக்கப் போகும் ஜீவானந்தம்

Trending News