Gunasekaran Replacement Actors: வீட்டில் சீரியல் பார்த்தாலே தலையில் அடித்துக் கொண்டு புலம்பி தவித்த கணவன்மார்களுக்கு நடுவில் சிம்ம சொப்பனமாக ஒய்யாரத்தில் ஜொலித்தது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த நாடகம் வந்த பிறகுதான் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சீரியலை பார்க்க ஆரம்பித்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எதார்த்தமான கதையுடன் துல்லியமான கேரக்டர்களை வைத்து நகர்ந்து வந்தது.
முக்கியமாக குணசேகரன் நடிப்பை பார்த்து ரசிப்பதற்காகவே இந்த நாடகத்தை அனைவரும் பார்த்து வந்தார்கள். அப்படிப்பட்ட இவர் தற்போது இல்லை என்ற நிலைமைக்கு வந்ததும் இந்த நாடகமே இனிமேல் பார்க்க மாட்டோம் என்று ஒரு சில ரசிகர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் சன் டிவியில் டிஆர்பி ரேட் அடிபட்டு விடும் என்று அவரைப்போல அச்சு அசலாக ஒரு நடிகரை கூட்டி நடிக்க வைக்க வேண்டும் என ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவரே போல வேலராமமூர்த்தி இருப்பதால் இவர் நடித்தால் நிச்சயமாக நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் அவர் இதுவரை எந்தவித பதிலும் சொல்லாமல் இழுத்தடித்ததால் சன் டிவி நிறுவனம் வேறொரு 5 நடிகர்களிடம் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் பல லட்சங்கள் கொடுத்தாவது குணசேகரன் மாதிரி ஒரு இணையான நடிகரை வைத்து நிரப்ப வேண்டும் என்று அல்லோல பட்டு வருகிறது. இவர்கள் நடித்தால் ஓரளவுக்கு குணசேகரன் கதாபாத்திரத்தை நிரப்ப முடியும் என்று நினைத்திருக்கிறார்கள்.
Also read: டிஆர்பிக்காக சன் டிவி செய்த மட்டமான வேலை.. குணசேகரன் கதாபாத்திரத்திற்காக போட்ட ஸ்கெட்ச்
அதில் பல படங்களில் அப்பா கேரக்டரில் நடித்த நடிகர் இளவரசு மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸில் மூர்த்தியாக நடித்து வரும் ஸ்டாலின் இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்ததாக போஸ் வெங்கட், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் ஆடுகளம் நரேன் இவர்களும் சன் பிக்சர்ஸ் லிஸ்டில் இருக்கிறார்கள். என்ன தான் இவர்களில் யார் நடித்தாலும் ஆதி குணசேகரன் கேரக்டரை யாராலும் நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.
அத்துடன் இப்பொழுது ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் நடித்து வந்தாலும் அவருடைய குரலுக்கு வேறொருவர் டப்பிங் கொடுத்து வருகிறார். இதை கேட்ட ரசிகர்கள் எங்களால் இந்த குரலையை கேட்க முடியவில்லை, பிறகு எப்படி நாங்கள் வேறொரு குணசேகரனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொறுப்பில் சன் டிவி நிறுவனம் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.