வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தர்ஷினியை கடத்திய குணசேகரனின் தங்கச்சி.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஈஸ்வரி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் ஆணாதிக்க திமிரால் பெற்ற மகளிடமே வன்மையாக நடந்து கொள்ளும் அளவிற்கு போய்விட்டார். அதன் விளைவாக தர்ஷினி மன உளைச்சலுக்கு ஆளாகி ட்ரெயினில் பங்கு பெற முடியாமல் போய்விட்டது. அதனால் விரக்தியில் வீட்டிற்கு திரும்பிய தர்ஷினியை மர்ம கும்பல்கள் கடத்தி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் தர்ஷினியே தேடி வந்த ஈஸ்வரி மற்றும் நந்தினிக்கு கடைசியில் அவருடைய போன் மற்றும் சூ தான் கிடைத்தது. இதனால் பயந்து போன இவர்கள் ஜனனிக்கு தகவல்களை கொடுத்து விடுகிறார்கள். பிறகு அந்த இடத்திற்கு சக்தி, ஜனனி, தர்ஷன் அனைவரும் வந்து தர்ஷினியை தேடி போகிறார்கள். இதற்கிடையில் இந்த விஷயத்தை ரேணுகாவும் குணசேகரனிடம் சொல்கிறார்.

உடனே குணசேகரன் தர்ஷினியின் காதலன் என்று ஒருத்தரை அறிமுகப்படுத்திய நண்பர் வீட்டிற்கு கதிரை கூட்டிட்டு போய் அராஜகம் பண்ணி விசாரிக்கிறார். ஆனால் அங்கே தர்ஷினி இல்லை என்று தெரிந்ததும் குணசேகரன் அங்கு இருப்பவர்களை மிரட்டி விட்டு திரும்புகிறார். பிறகு தர்ஷினியை எங்கேயுமே காணும் என்றதும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்கள்.

Also read: எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்

அத்துடன் வீட்டிற்கு வந்த சக்தி, கரிகாலனிடம் நீ தான் ஏதோ பண்ணி இருக்கிறாய் என்று கேட்கிறார். அதன் பின்பு ஜான்சி ராணியும் வீட்டிற்கு வந்ததும் நந்தினி ரேணுகா அவரை வெளுத்து வாங்கி தர்ஷினியை பற்றி கேட்கிறார். ஆனால் ஜான்சி ராணியின் பேச்சும் நடவடிக்கையும் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகிறது. ஒரு வேலை ஜான்சி ராணி தர்ஷினியை கடத்திருக்க கூட வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் போலீசார் விசாரணைக்காக குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள். வழக்கம்போல் குணசேகரன் எல்லா தவறும் ஈஸ்வரி ஜனனி மீது தான் இருக்கிறது என்பது போல் சொல்கிறார். இதனை கேட்டு வெறிகொண்டு எழுந்த ஈஸ்வரி மொத்த கோபத்தையும் குணசேகரன் மீது கொட்டி தீர்க்கப் போகிறார். ஆனால் அதோடு விடாமல் கண்ணம் பழுக்கிற அளவுக்கு ஒரு அரை விட்டால் இன்னும் சூப்பராகவே இருக்கும்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் குணசேகரனின் அம்மா விசாலாட்சி, ஈஸ்வரி மீதுதான் குறை சொல்கிறார். எப்பொழுதும் மாமியார் என்ற ஒரு உணர்வுடன் அமைதியாக பேசிய ஈஸ்வரி தற்போது தன்னுடைய பெற்ற மகளுக்கு ஒரு பிரச்சனை என்றதும் மாமியார் என்று கூட பார்க்காமல் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி வாயை அடைத்து விடுகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தர்ஷினி எந்த இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தெரியும் அளவிற்கு புத்தியுடன் இருக்கிறவர். அந்த வகையில் இந்த பிரச்சனை எல்லாம் அவர் ஒருவரை சரி செய்து கூடிய விரைவில் வீட்டுக்கு திரும்பி விடுவார்.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சிங்கபெண்ணிடம் தோற்றுப் போன எதிர்நீச்சல்

Trending News