Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்து விறுவிறுப்பாக கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது நடக்க இருக்கும் திருவிழா நிகழ்ச்சியில் பெரிய சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது. அதே மாதிரி அப்பத்தா திருவிழா முடிந்த கையுடன் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி அவருடைய 40% சொத்துக்கு முடிவு கட்டப் போகிறார்.
அத்துடன் கதிர் அந்த திருவிழாவில் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா எனக் குறி வைத்து ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவின் கதையை முடிப்பதற்கு சைக்கோ வளவன் மற்றும் கரிகாலன் உதவியுடன் மாஸ்டர் பிளான் பண்ணி இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு குணசேகரன் வந்தால் அவரையும் கதிரையும் சும்மா விடமாட்டேன் என்று ஜீவானந்தம் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.
அதற்குக் காரணம் இவருடைய மனைவி இறப்பிற்கு காரணம் இவர்கள் இரண்டு பேர்தான் என்ற உண்மை தெரிந்து விட்டது. ஆனால் இந்த உண்மை தெரிந்தும் ஈஸ்வரி தன்னிடம் இருந்து சுயநலத்திற்காக மறைத்து விட்டால் என்பதற்காக அவர் மீது கோபத்தில் இருக்கிறார். இதனால் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஜீவானந்தத்திற்கு போன் பண்ணி வெண்பாவை பற்றி பேசி அவள் என்னுடைய இருக்கட்டும் நான் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என கேட்கிறார். ஆனால் ஜீவானந்தம் ஈஸ்வரி மீது கோபமாக இருப்பதால் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
அத்துடன் ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவரை நினைத்து உருகி உருகி ஈஸ்வரி கவலைப்படுகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கோவிலுக்கு போகும் வழியில் ஜான்சி ராணி அந்த நான்கு மருமகளுடன் சேர்ந்து காரில் போய்க்கொண்டு இருக்கிறார்.
ஆனால் அவருடைய அலப்பறையை தாங்க முடியாமல் பாதியிலேயே கழட்டி விட்டு சக்தி மற்றும் அந்த வீட்டில் உள்ள பெண்கள் திருவிழாவிற்கு கிளம்பி விடுகிறார்கள். இதற்கிடையில் சக்தி மற்றும் ஜனனி சும்மா வெத்துவேட்டாகவே வாயை மூடிக்கொண்டு இருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை வெறுக்க வைக்கிறது. தற்போது குணசேகரன் இல்லாததால் சக்திக்கு டயலாக் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.