திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

பொறுத்தது போதும் பொங்கி எழுந்த குணசேகரனின் தங்கை.. எஸ்கேஆர் வீட்டில் தஞ்சம் அடைந்த ஆதிரை

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தற்போது ஆதிரையின் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது. அதாவது ஒரு பொண்ணு நினைச்சா பூமா தேவியை விட பொறுமையாகவும் இருக்க தெரியும், பிரச்சனைன்னு வந்துவிட்டால் பொங்கி எழவும் தெரியும் என்பதற்கு ஏற்ப நிரூபித்து விட்டார். இத்தனை நாள் அண்ணன் வீடே கதி என்று அடிமை வாழ்க்கையை வாழ்ந்துட்டு வந்தார் ஆதிரை.

ஆனால் தற்போது குணசேகரன் அட்டூழியம் தாங்க முடியவில்லை. கதிரின் கைகால் உடைந்ததற்கு காரணமாக இருந்தது எஸ்கேஆர் என்று குணசேகரன் நினைத்து அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் தீர்த்து கட்ட வேண்டும் என்று பேசுகிறார். இதனை பார்த்த ஆதிரை ஆவேசத்தின் உச்சகட்டமாக கோபத்தை வெளி காட்டினார்.

அப்பொழுது ஈஸ்வரி மற்றும் ஜனனி, ஆதிரைக்கு சப்போர்ட்டாக குணசேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். வாக்குவாதம் முற்றியதால் குணசேகரன், ஆமாம் நான் தான் அருணை காலி பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணினேன். ஆனால் அவன் நல்ல நேரம் கை கால் உடைஞ்சதோடு நொண்டியாகி விட்டான் என்று சொல்கிறார். இதனை தெரிந்து கொண்ட ஆதிரை ரொம்பவே குற்ற உணர்ச்சியில் நொறுங்கி போய்விட்டார்.

Also read: டோட்டலா டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்.. சன் டிவி குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் வெறித்தனமான போட்டி

இதன் பின் ஆதிரை, குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசுவதற்காக இனிமேலும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணி விட்டார். அதனால் பெட்டி படுக்கை எடுத்து வீட்டை விட்டு கிளம்பி அண்ணியிடம் நான் போயிட்டு வரேன் என்று சொல்கிறார். அப்பொழுது ஜான்சி, நீ எங்க போற என்று கேட்டதற்கு மொத்த கோபத்தையும் வெளிக்காட்டும் விதமாக கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்து விடுகிறார்.

கண்டிப்பாக ஆதிரை, எஸ்கேஆர் வீட்டிற்கு தான் போயிருப்பார். அங்கே அருணுக்கு பக்கபலமாக இருந்து ஒரு நல்ல சப்போர்ட் பண்ணி அவரையே கல்யாணம் பண்ணுவதற்கு முடிவு எடுத்து விட்டார். இதை தெரிந்து கொண்ட குணசேகரன் மற்றும் தம்பிகள் அனைவரும் எஸ்கேஆர் வீட்டிற்க்கு கோபமாக போகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சக்தியும் போகிறார்.

அந்த வகையில் சக்தி, குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசப்போகிறாரா என்பது தான் பலருக்கும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் சக்தி, ஆதிரை எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் போகிறார். அத்துடன் குணசேகரன் மூலம் ஆதிரைக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் சக்தி கூட போகிறார். அந்த வகையில் ஆதிரை நினைத்தபடி வாழ்க்கை அவருக்கு சந்தோஷமாக அமையப் போகிறது. இப்படி படிப்படியாக குணசேகரன் ஒவ்வொரு விஷயத்திலும் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.

Also read: குணசேகரனின் கொட்டத்தை அடக்க ஈஸ்வரி எடுக்க போகும் முடிவு.. யார் கொடுத்த தைரியம் தெரியுமா?

Trending News