செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர்.. குற்றவாளியை அடையாளம் கண்ட போலீஸ், காரணம் என்ன?

Donald Trump: அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் காரசாரமான தேர்தல் களம் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது.

மக்களிடையே பரப்புரையும் நடத்தி வருகிறார்கள். இன்று முன்னாள் அதிபர் ட்ரம்ப் பெனிசுலியாவில் தன்னுடைய தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு இருந்தார். அப்போது ட்ரம்பை நோக்கி வந்த துப்பாக்கி கொண்டு அவருடைய காதை பதம் பார்த்தது.

அடுத்தடுத்து அவரை நோக்கி துப்பாக்கி குண்டுகள் வர உஷார் ஆன ட்ரம்ப் உடனே கீழே குனிந்து கொண்டார். பாதுகாப்பு படையினர் உடனே ட்ரம்பை பத்திரமாக மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்.

குண்டு வந்த இடத்தை நோக்கி சுட்டபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரும் உயிரிழந்து விட்டார். மேலும் துப்பாக்கி குண்டு பட்டு பொதுமக்களில் ஒருவரும் இறந்திருக்கிறார். மர்ம நபரின் அடையாளத்தை வைத்து அவர் 20 வயதான மேத்யூ தாமஸ் என கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் ஏன் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Donald Trump gun shoot
Donald Trump gun shoot

Donald Trump gun shoot
Donald Trump gun shoot

Trending News