புதன்கிழமை, மார்ச் 12, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் சக்திக்கு ஜோடியாக இணைந்த குந்தவை.. கோட்டை விட்ட ஜனனி, குணசேகரனுக்கு விழப் போகும் அடி

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குந்தவை கேட்ட கேள்வியும் சரிதான் என்பதற்கு ஏற்பதான் ஜனனியின் அலட்சியத்தால் சக்தியின் வாழ்க்கை ஒரு பிடிப்பில்லாமல் அமைந்திருக்கிறது. அதாவது ஊருக்கு என்ன தான் உபதேசம் பண்ணாலும் வீட்டில் தமக்காக இருக்கும் கணவனை கண்டு கொள்ளாமல் பஞ்சாயத்து பண்ணும் ஜனனிக்கு தற்போது சக்தி கொடுத்த பதிலடி தான் எனக்கு தோன்ற விஷயத்தை நான் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதற்காக நான் இப்பொழுது எனக்காக வாழ போகிறேன் என்று சொல்லி இருந்தார். இந்த சமயத்தில் குணசேகரன் கொடுத்த பொறுப்பை முடிக்கும் விதமாக தர்ஷன் கல்யாணம் விஷயத்தை பேசுவதற்கு சக்தி, குந்தவையை சந்தித்து பேசுகிறார். அப்படி குந்தவையை சந்தித்து பேசிய பொழுது, எதார்த்தமான வாழ்க்கை என்னவென்று தெளிவாக சக்திக்கு புரிய வைக்கும்படி பேசி விட்டார்.

அதாவது வீட்டில் முடங்கிப் போய் இருக்கும் பெண்களின் முன்னேற்றத்தையும், லட்சியத்தோடு இருக்கும் உங்க அண்ணிகளையும் முன்னேற்றுவதற்கு ஜனனி இந்த அளவுக்கு யோசிக்கிறாங்க என்றால் ஏன் அவங்களால உன் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இல்லாமல் போய் விட்டார்கள். குழம்பி போய் இருக்கும் உனக்கு ஒரு ரூட் போட்டு கொடுத்திருந்தால் அதைப்பிடித்து நீ இந்நேரம் ஜெயித்திருக்க முடியும் என்று ஜனனி, கோட்டை விட்ட விஷயங்களை பற்றி சக்திக்கு எடுத்துரைக்கிறார்.

அந்த வகையில் சக்தியும் குந்தவை சொல்வது சரிதான் என்பதற்கு ஏற்ப எல்லாத்தையும் யோசித்துப் பார்க்கிறார். ஒரு பக்கம் அப்படித்தான் என்றால் இன்னொரு பக்கம் சக்திக்கு குழந்தை மீது ஆசை இருக்கு என்று தெரிந்தும் ஜனனி அதை கண்டுகொள்ளாமல் சக்தியை தான் சமாதானப்படுத்தி வந்தார். இப்படி ஜனனி செய்த அலட்சியத்தால் சக்தி தற்போது அவஸ்தைப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் சக்திக்கு ஒரு தோழியாகவும் சக்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எல்லாம் ஆகுமாக குந்தவை தூக்கி விடப் போகிறார். இதனை அடுத்து தர்ஷன் கல்யாணத்தோடு குணசேகரனை நிரந்தரமாக ஜெயிலில் உட்கார வைக்க வேண்டும் என்று கதிர் நினைக்கிறார்.

அந்த வகையில் மருமகன் ஆசை படி கதிரின் மாமனார், குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்புவதற்கு சதி பண்ணப் போகிறார். கதிர் உடைய கேரக்டர் தெரியாமல் குணசேகரன் எல்லா சொத்துக்களின் பொறுப்பையும் கொடுத்து நம்பியதால் தற்போது ஏமாந்து போய் நிற்கப் போகிறார். அந்த சமயம் தான் குணசேகரன் வாழ்க்கை பற்றி உணரும் நேரமாக இருக்கப் போகிறது. அத்துடன் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த நான்கு பெண்களும் அவர்களுடைய சொந்த முயற்சியில் ஜெயித்து குணசேகருக்கு சரியான பதிலடி கொடுக்கப் போகிறார்கள்.

Trending News