புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டாப் நடிகர்களுக்கே கிடைக்காத அங்கீகாரம்.. சாதித்து காட்டிய குரு சோமசுந்தரம்

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் குரு சோமசுந்தரம். இவர் ரஜினி கமல் அளவிற்கு நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ஒரு சில படங்களிலேயே அந்த அளவிற்கு புகழ் பெற்று விட்டார்.

ஜோக்கர் என்ற மாறுபட்ட படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குரு சோமசுந்தரம் அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து அவரது நடிப்பு திறமையை மக்கள் அறியும்படி செய்தார். இதுநாள் வரை தமிழ் ரசிகர்கள் மட்டும் பாராட்டி வந்த குரு சோமசுந்தரத்தை தற்போது மலையாள ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

அதன்படி சமீபத்தில் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து குரு சோமசுந்தரம் நடித்த மின்னல் முரளி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றுள்ளது. அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் குரு சோமசுந்தரத்தை வெகுவாக பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி குரு சோமசுந்தரத்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போன மோகன்லால் தான் இயக்க உள்ள பாரோஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரை அழைத்துள்ளார். இதுவே அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி தான். இந்நிலையில் டாப் நடிகர்களுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் குரு சோமசுந்தரத்திற்கு கிடைத்துள்ளது.

அதாவது குரு சோமசுந்தரம் இதுவரை ஒரே கேரக்டரில் நடித்ததே கிடையாது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தான் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் இவர் நடிக்கும் காட்சிக்காக இரண்டு கேமரா மேன்கள் அதுவும் வெளிநாட்டு கேமரா மேன்கள் தான் வேண்டும் என கேட்டுள்ளாராம்.

இத்தனைக்கும் அந்த காட்சி வெறும் ஒரு நிமிட காட்சியாம். அதை கிட்டத்தட்ட ஆறு நிமிடத்தில் நடித்து கொடுத்துள்ளார். ஒரு நிமிட காட்சிக்காக இரண்டு கேமரா மேன்களை கேட்டுள்ளார் என்றால் அது எவ்வளவு முக்கியமான காட்சியாக இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள். அந்த அளவிற்கு அவரின் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Trending News