வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

12 போட்டியாளர்களின் நண்பர்களை வீட்டுக்குள் அனுப்பப் போகும் குருநாதர்.. சௌந்தர்யா அருணுக்காக வரும் EX போட்டியாளர்

Bigg Boss Tamil 8: உலகத்தில் என்ன நடக்குது, நம்ம குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள், நமக்குத் தேவையான விஷயம் நம்மிடம் இல்லாமல், பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரே வீட்டில் 100 நாள் இருந்து தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின்படி ஒரு ரியாலிட்டி ஷோ கடந்த ஏழு வருஷமாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி ஆரம்பித்து வெற்றிகரமாக 75 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு சில வாரங்களில் வெற்றி பயணத்தை பிடிப்பதற்கு போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகிறார்கள்.

வீட்டிற்குள் தேவையான சாப்பாடு இல்லாமல், பொழுது போக்கிற்கு கையில் போனும் இல்லாமல், பிடித்தவர்களிடம் பேசவும் முடியாமல் தவிப்பது ஒரு வகையான வேதனை. அதிலும் கிடைக்கிறது சாப்பிட்டு எலும்பு தோலுமாக மாறிய நிலையிலும் பிக் பாஸ் கொடுக்கும் கடுமையான டாஸ்க்களையும், போட்டியாளர்களிடம் ஏற்படும் வாக்குவாதத்தையும் ஜீரணிக்க வேண்டும்.

இப்படி எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து வரும் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருப்பது அந்த வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் வருவதுதான். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து சென்டிமெண்டாக பேசி பாசத்தை காட்டி விட்டார்கள்.

இதனை தொடர்ந்து இந்த முறை புதுசாக ஒரு விஷயமும் நடக்கப் போகிறது. அதாவது வீட்டிற்குள் இருக்கும் 12 போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களை உள்ளே அனுப்பி இன்னும் ரியாலிட்டி ஷோவை விறுவிறுப்பாக குருநாதர் முடிவெடுத்திருக்கிறார்.

முக்கியமாக அருணுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் விதமாக போன சீசனில் வெற்றி பெற்ற அர்ச்சனா உள்ளே போகப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதே மாதிரி சௌந்தர்யாவுக்கு கொடி பிடிப்பதற்கு நெருங்கிய நண்பர் மற்றும் கடந்த சீசனில் டாப் 4வரை போன போட்டியாளர் விஷ்ணுவும் சௌந்தர்யாவின் நண்பராக உள்ளே போகப் போகிறார்.

இவர்களை தொடர்ந்து மற்ற போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் போகப் போகிறார்கள். இந்த விஷயங்கள் அத்தனையும் வெள்ளிக்கிழமை அன்று நாளை டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

Trending News