செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அர்ச்சனாவின் கேம்க்கு பின்னாடி குருநாதரின் மாஸ்டர் பிளான்.. மைண்ட் வாய்ஸ்ல உளறிய தினேஷ், மணி

Bigg boss Season 7 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 7 ஒவ்வொரு நாளும் காரசாரமான சண்டை காட்சிகளை வைத்து போட்டியாளர்கள் தரமான சம்பவத்தை கொடுத்து வருகிறார்கள். அதில் இவ்வளவு நாளாக கன்டென்ட்டுக்கு ராணியாக இருந்தவர் மாயா. இவரையே ஒன்னும் இல்லாமல் ஆக்கும் அளவிற்கு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் அர்ச்சனா வந்தது மொத்த கேமையும் தலைகீழாக மாற்றிவிட்டார்.

அதாவது அர்ச்சனா வருவதற்கு முன் புள்ள பூச்சியாக சண்டை சச்சரவுக்கு ஒதுங்கியே இருந்தார் விசித்ரா. ஆனால் அர்ச்சனா வந்ததற்கு பின் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு பேரையும் அலற வைக்கிறார். இத்தனை நாளாக மாயாவின் கை பொம்மையாக இருந்து கொண்டிருந்த பூர்ணிமாவையும் கதி கலங்க வைத்துவிட்டார். அத்துடன் மாயா மற்றும் பூர்ணிமா முகத்திரையை கிழித்து காட்டும்படி அர்ச்சனா தரமான சம்பவத்தை செய்து வந்தார்.

அதனாலேயே விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு மக்கள் சப்போர்ட் செய்து வருகிறார்கள்.  அடுத்து தினேஷும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு பல விஷயங்களை ஓபன் ஆக உளறி இருக்கிறார்.

Also read: ஒரு மாதத்திற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.. ஆண்டவரை எச்சரித்த தலைவர் 

அதாவது அர்ச்சனா பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளே வரவேண்டியதாம். ஆனால் அப்படி அவரை விடாமல் வைல்ட் கார்டு மூலம் அனுப்பியது பிக் பாஸ் இன் குருநாதர் தான் என்று கூறியிருக்கிறார். அதற்கு பக்கத்தில் இருந்த மணிச்சந்திராவும் ஆமா எனக்கும் அர்ச்சனாக்கும் தான் சூட்டிங் ஒன்றுபோல நடந்தது. அப்படி இருக்கும் பொழுது அர்ச்சனாவை எங்களுடன் அனுப்பாமல் வைத்துதான் ஏனென்றால் அப்பொழுது புரியாமல் இருந்தது.

ஆனால் இப்பொழுது இவருக்கு பின் பல சூழ்ச்சிகள் நடந்திருக்கிறது என்பது புரிகிறது என்று மணி கூறுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து இவர் வருவது வரை 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்று ஒன்று விடாமல் பார்த்து பக்கவாக பிளான் பண்ணி வந்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தியதால் அர்ச்சனா ஒரு நல்ல பிளேயராக மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார் என்று பிக் பாஸ் ஹவுஸ்க்குள் ஒரு டிஸ்கசன் போய்க் கொண்டிருக்கிறது.

இது தெரியாமல் நாம் தான் அவர் விரித்த வலைக்குள் சிக்கிவிட்டோம். இனி அர்ச்சனாவிடம் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும் என்று தினேஷ் மற்றும் அங்குள்ள மொத்த கேங்கும் பேசுகிறார்கள். எது எப்படியோ இந்த கேமை பொருத்தவரை புத்தி யுக்தி இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அந்த வகையில் யாரு டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்பது போகப் போக போக தெரிந்து கொள்ள முடியும்.

Also read: தினேஷை எவிக்ட் செய்ய திட்டம் போட்ட மாயா, பூர்ணிமா.. கைகட்டி வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Trending News