சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கண்டிப்பாக ஜிவி பிரகாஷுக்கு விருது கிடைக்கும்.. பிரபல தேசிய விருது இயக்குனர் புகழாரம்.!

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் சிறந்த நடிகராக வளர்ந்து வருகிறார் .இசை நடிப்பு இரண்டிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். இவருடைய நடிப்பில் உருவான பேச்சுலர் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

மேலும் 2019ஆம் ஆண்டு வெளிவருவதாக இருந்த ஐயங்கரன் திரைப்படமும் இந்த மாதம் OTTயில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படமான ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் சௌந்தரராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் .வைரமுத்துவின் பாடல் வரிகளை ரகுநந்தன் இசையமைத்து இசை விருந்து படைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் தற்போது நடைபெற்று வருகிறது.

gv-prakash-seenu-ramasamy-kalaimagan-movie
gv-prakash-seenu-ramasamy-kalaimagan-movie

தலைப்பு வைக்காமலேயே படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டனர் படக்குழுவினர். தற்போது இடிமுழக்கம் என தலைப்பிட்டு இதனை நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வும் ஆன உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் எடிட்டிங் செய்து பார்த்தபின் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் ஜிவி பிரகாஷுக்கு கண்டிப்பாக விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு இறைச்சிக் கடை முதலாளியாக நடிக்கிறாராம். அவருடைய நடிப்பு நிச்சயமாக பாராட்டைப் பெறும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். பாராட்டுக்கு ஜிவி பிரகாஷ் நன்றியையும் தெரிவித்திருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இடிமுழக்கம்.

Trending News