ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசை தம்பதிகள் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி. இவர்கள் காம்போவில் வந்த பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்கள். அந்த பாட்டில் இருக்கும் எமோஷன்கள் மனிதர்களை ஆட்டி படைக்கும். இவர்கள் காம்போவில் வந்த, ‘பிறை தேடும்’, ‘யார் இந்த சாலை ஓரம்’, ‘என் ஜீவன்’, ‘யாரோ இவன்’, ‘மனசெல்லாம் மழையே’.. இப்படி ஏராளமான பாடல்கள் ரசிகர்கள் playlist-டை ரூல் செய்கிறது.
பள்ளி பருவம் முதலே காதலித்து திருமணம் முடித்த இவர்கள், ரசிகர்களின் Favourite couples ஆக இருந்தனர். இந்த நிலையில் தான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய முடிவு செய்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. மீண்டும் இணைந்து விடுங்கள் என்று கண்ணீருடன் கமெண்ட் செய்தும் வந்தனர்.
மீண்டும் இணைந்த GV Saindhavi
இவர்கள் விவாகரத்து செய்தியை தொடர்ந்து, பிரச்சனையை கண்ணு மூக்கு வாய், என்று ஒவ்வொன்றாக வைத்து ஆளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர். இதை பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது தான், ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து என்ற announcement வந்தது. இதை விட்டு நெட்டிசன்கள் அதை பிடித்துக்கொண்டனர்.
இந்த நிலையில், விவாகரத்து அறிவித்த பிறகு, இவர்கள் மீண்டும் ஒரு மேடையில் இணைந்துள்ளனர். மலேஷியாவில் ஒரு concert நடந்துள்ளது. அந்த கான்செர்ட்டில் ஜிவி மற்றும் சைந்தவி இணைந்து பாட பாட ரசிகர்கள் பயங்கரமாக ஆர்பரித்துள்ளனர்.
முக்கியமாக பிறை தேடும் பாட்டை இவர்கள் இந்த நிலையில் ஒன்றாக பாடும்போது ரசிகர்கள் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டனர்.
‘என் ஆயுள் ரேகை நீயடி..’ என்று ஜிவி பாடும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரங்கள் மேடையை அதிர வைத்தது. மேலும் இதன் விடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வர, “எப்புடினே உங்களால இது முடியுது.. பாக்குற எங்களுக்கு கண் கலக்குது..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்..
மேலும் ஒரு சிலர், “Maturity at its peak”, “Real Professionalism” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.