ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வெற்றிமாறன் புண்ணியத்தில் ஒன்று சேர்ந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

G.V Prakash: கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் கோலிவுட்டில் இப்போது இந்த கலாச்சாரம் அதிகமாகி கொண்டே வருகிறது.

அமலாபால், சமந்தா, தனுஷ் என ஆரம்பித்து தற்போது ஜிவி பிரகாஷ் வரை விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி ஜிவி பிரகாஷ் தன் மனைவி சைந்தவியை விட்டு பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு காரணம் என்ன என பலரும் கேட்டு வந்தனர். மேலும் சினிமா விமர்சகர்களும் பல கட்டுக்கதைகளை பரப்பி வந்தார்கள். இதனால் சோர்வடைந்த ஜிவி பிரகாஷ் தங்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார்.

இருப்பினும் இந்த ஜோடி பிரிந்தது ரசிகர்களுக்கு இப்போது வரை வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது இவர்களை சேர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ்

அதாவது அவருடைய தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் சார் படத்தில் தான் இந்த இசை ஜோடி இணைந்து இருக்கின்றனர். விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஒரு பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்களாம்.

அப்பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளிவந்தது. அப்படி என்றால் இதன் மூலம் அவர்கள் தங்கள் விவாகரத்து முடிவிலிருந்து பின்வாங்குவார்களா எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த ஜோடியின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது வெளிவர உள்ள பாடலும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு தொழில் விஷயமாக இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இது அவர்களுடைய மனதையும் மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இப்பாடல் இவர்களுடைய பிரிவுக்கு முன் கூட பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற யூகமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி

- Advertisement -

Trending News