திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யோசிக்காமல் ஜிவி பிரகாஷ் செய்த விஷயம்.. படத்திலிருந்து தூக்க பிளான் போடும் வெற்றிமாறன்

Music Director G.V.Prakash: தமிழ் சினிமாவில் நடிகராகவும் முன்னணி இசையமைப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த ஒரு விஷயம் இப்போது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு ஜிவி பிரகாஷ் வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் தரமான பாடல்களை கொடுத்து தன்னை ஒரு முன்னணி இசையமைப்பாளராக நிலை நிறுத்திக் கொண்டார்.

அதன் காரணமாகவே வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசலிலும் ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து ஜிவி பிரகாஷை நீக்கி விடலாமா என்ற யோசனையில் வெற்றிமாறன் இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: ஜிவி பிரகாஷ்-சை சங்கடத்தில் மாட்டி விட்ட பத்திரிக்கையாளர்.. நேர்த்தியான பதிலால் குவியும் பாராட்டு

ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வருகை புரிந்திருந்தார். 9 ஆண்டு நிறைவடைந்த பாஜகவின் ஆட்சியை குறித்த சாதனைகளை விளக்கும் வகையில் அமித்ஷா பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் இப்போது சென்னைக்கும் வந்திருந்தார்.

அவர் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தபோது பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் அவரை சந்தித்தனர். அப்போது
சினிமா துறையில் இருந்து ஒரு சிலர் அவரை நேரில் சந்தித்து இருக்கின்றனர். அவர்களுள் ஜிவி பிரகாசும் ஒருவர். அரசியல் சம்பந்தப்பட்டவரை எதற்காக சினிமாவில் இருக்கக்கூடிய ஜிவி பிரகாஷ் சந்திக்க வேண்டும் என்பதுதான் வெற்றிமாறனின் கேள்வி. ஜிவி பிரகாஷ் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மட்டுமே அமித் ஷாவிடம் பேசியதாக அவரே பேட்டி ஒன்றில் கூறினார்.

Also Read: மாணவிக்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல்.. குவிந்து வரும் பாராட்டுகள்.

ஆனால் அமித் ஷா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு டெல்லி வந்தால் வீட்டுக்கு வரவும் என்று சொன்னதுடன் ஜிவி பிரகாசுக்கு தேசிய அளவில் முக்கிய பதவி தருவதாகவும் தகவல்கள் வந்தன. வெற்றிமாறன் இது மாதிரி கருத்துக்களில் இருந்து வேறுபட்டவர். இதனால் கடுப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் வாடிவாசல் படத்திலிருந்து ஜிவி பிரகாஷை நீக்கலாமா என முடிவெடுத்துள்ளார்.

இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை. ஆனால் வெற்றிமாறன் கண்டிப்பாக இந்த மாதிரி விஷயங்களுக்கு கோபப்படுவார். இது புரியாமல் சிறு பிள்ளை போல் ஜிவி பிரகாஷ் அமித் ஷாவை தேவை இல்லாமல் சந்தித்து இப்போது வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

Trending News