புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜிவி பிரகாஷின் ரெபல் வென்றதா? காலை வாரிவிட்டதா? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

GV Prakash : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் எக்கச்சக்க படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் சோலோவாக ஜிவி பிரகாஷின் ரெபல் படம் வெளியாகி இருந்தது.

80களில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இந்த படத்தை எடுத்திருந்தனர். அதாவது மூணாறில் இருந்து பாலக்காட்டுக்கு படிக்க வரும் தமிழ் இளைஞர் எவ்வாறு மட்டம் தட்டப்படுகிறார்.

தமிழனாக பிறந்தால் தப்பா, தமிழருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யும் ரெபலாக ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு பக்கவாக ஜிவி பிரகாஷ் பொருந்தி இருந்தார்.

இளைஞர்களை கவர்ந்த மமிதா பைஜு

ரெபல் படத்தில் ஜிவி பிரகாஷை பலரும் மட்டம் தட்டும் நிலையில் அவர் மீது காதல் கொள்கிறார் மமிதா பைஜு. மிகவும் அழகாக மற்றும் எதார்த்தமாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

மேலும் படத்திற்கு முக்கிய பலமாக பார்க்கப்படுவது ஒளிப்பதிவு. அதேபோல் ஜிவி பிரகாஷின் இசையும் வலு சேர்த்துள்ளது. ஆனாலும் படத்தில் சில இடங்களில் சொதப்பியதால் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

ரெபல் முதல் நாள் கலெக்சன்

ஜிவி பிரகாஷ் ரெபல் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். அதன்படி போட்டி படங்கள் இல்லாமல் தனியாக ரெபல் படம் வெளியானதால் முதல் நாளில் கிட்டத்தட்ட இரண்டு கோடி வசூல் பெற்றுள்ளது. வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால் ரெபல் படம் ஜிவி பிரகாஷை காலை வாரி விடாது என்று நம்பலாம். அதோடு அவரது நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Trending News