புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு.. தம்மா துண்டு இருந்துட்டு விஜய், ரஜினிகே டஃப் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்

GV Prakash: பொதுவாக ஆள பார்த்து யாரையும் எடை போட கூடாதுன்னு சொல்லுவாங்க. அது போல தான் ஜிவி பிரகாஷ், என்னதான் இசையமைப்பாளராக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தாலும் அவருக்கும் நடிகராக பிரபலமாக வேண்டும் என்ற ஆசை ஆரம்பத்திலேயே இருந்திருக்கிறது. அதனால் தான் தற்போது இசையமைப்பதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜய், ரஜினிகே டஃப் கொடுக்கும் அளவிற்கு இவருடைய கேரியரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அதாவது தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார். இந்த படத்தை ஜிவி பிரகாஷ் தயாரித்து அவரே ஹீரோவாக நடிக்கிறார்.

Also read: ஜிவி பிரகாஷ் வேண்டாம் நீங்க வாங்க.. பல வருடங்களுக்குப் பிறகு இணையும் ரெண்டு ராஜாக்கள்

ஏற்கனவே ஜிவி பிரகாஷ் தயாரித்த மதயானை கூட்டம் அவருக்கு மிகுந்த லாபத்தை கொடுத்தது. அதுபோலவே இப்படத்திலும் டபுள் மடங்கு லாபத்தை பார்க்கலாம் என்று இரண்டாவது முறையாக தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். மேலும் ஜி ஸ்டூடியோ மூலம் சேர்ந்து தயாரிக்கப் போகிறார். இது ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25வது படமாகும்.

இப்படத்திற்கு கிங்ஸ்டன் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். அத்துடன் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பட்ஜெட் 20 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படம் மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால் அதிக வசூலை பெறலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Also read: மொத்தத்தில் ரூட்டை போட்டுக் கொடுத்த விஜய்.. ஜிவி பிரகாஷ், ப்ரியா பவானி சங்கர் போடும் ஆட்டம்

இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் எப்படியாவது ஏப்ரல் மே மாதத்திற்குள் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று மும்மரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம் கோடை விடுமுறை நாட்களில் வெளியிட்டால் படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். அதன் மூலம் படத்திற்கு லாபம் வரும் என்ற யோசனை.

ஆனாலும் பான் இந்தியா படம் என்றாலே தற்போது வரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், ரஜினி, கமல், சூர்யா, அஜித் போன்ற நடிகர்கள் தான் நடித்துக் கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இவர்கள் அனைவருக்கும் டஃப் கொடுக்கிற மாதிரி இவரும் களத்தில் இறங்கி விட்டார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப இவருடைய நடவடிக்கைகள் அதிரடியாக இருந்து வருகிறது.

Also read: யோசிக்காமல் ஜிவி பிரகாஷ் செய்த விஷயம்.. படத்திலிருந்து தூக்க பிளான் போடும் வெற்றிமாறன்

Trending News