செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

GV பிரகாஷின் பேச்சுலர் எப்படி.? தேறுமா.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து, தற்போது கதாநாயகனாக கொடிகட்டி பறப்பவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டே இருக்கும். அதனால் இவர் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் இணைந்து பேச்சிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க கல்யாணம் செய்யாமல் வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஜிவி பிரகாஷ் இப்படத்தில் கோயமுத்தூர் பயனாக நடித்துள்ளார். அப்போதே இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது அதாவது நடிகையின் தொடையில் சாய்ந்தபடி ஜிவி பிரகாஷ் போஸ் கொடுத்திருப்பார்.

bachelor-movie-twitter-review
bachelor-movie-twitter-review

இப்படத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் அற்புதமான காதலை. அதனை தவறான வழியில் பயன்படுத்தும் மனிதர்களை மையமாக கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை பொறுமையாக சென்றாலும் போகப்போக படத்தின் திரில்லிங் காட்சிகள் படத்திற்கு பக்கபலமாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

bachelor-movie-twitter-review
bachelor-movie-twitter-review

இப்படத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பு படத்தில்  சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. மேலும் ஜிவி பிரகஷ் 100 படங்கள் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற அளவிற்கு தனது நடிப்புத் திறமை காட்டி உள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜிவி பிரகாஷின் திரை வாழ்க்கையை இப்படம் முக்கிய படமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

bachelor-movie-twitter-review
bachelor-movie-twitter-review

மேலும் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். அர்ஜுன் ரெட்டி படத்தில் எப்படி காட்சிகள் இருந்ததோ அதேபோல பேச்சிலர் படத்திலும் ஒரு சில கசமுசா காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி உள்ளனர். ஏறக்குறைய படத்தின் கதை சிறப்பாக உள்ளதால் படம் நல்லா இருக்கும் என நம்பி போகலாம். மேலும் பேச்சுலர் விமர்சனம் பார்க்க

bachelor-movie-twitter-review
bachelor-movie-twitter-review

Trending News