ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஜீவி பிரகாஷ்க்கு எமனாக வந்த சூர்யாவின் உறவினர்.. ஆனா அவருக்கு குட்டு வைத்து அனுப்பிய நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டு வலம் வருபவர் GV பிரகாஷ். இவரது நடிப்பில் ரொம்ப நாட்களாக  உருவாகியுள்ள படங்களில் ஒன்றுதான் ஜெயில். வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் GV பிரகாஷ்க்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடித்துள்ளார். இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன் ஸ்ரீதரன் தயாரித்துள்ளார்.

ஜெயில் படத்தில் ஏகப்பட்ட இரட்டை வசனங்கள் இடம் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது மேலும் சென்னையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி கதைக்களம் அமைந்துள்ளதால் படம் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பியிருந்த நிலையில் இப்படத்திற்கான சிக்கல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக காத்திருந்த நிலையில் இந்த படத்தை வெளியிடக் கூடாது இதன் வெளியீட்டு உரிமை எங்களிடம் இருக்கிறது என சூர்யாவின் உறவினர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மேலும் ஜெயில் படத்தில் நான்தான் வெளியிடுவேன் நான்தான் வினியோகஸ்தர் என்ற பெயரில் கிரிக்ஸ் சினி கிரியேஷன் சார்பாக ஸ்ரீதரன் அவர்களும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயில் படத்தை வெளியிட எந்தவித தடையும் இல்லை.

இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிக்ஸ் சினி கிரியேஷன் ஸ்ரீதரன் அவர்களே வெளியிடலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஜெயில் திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jail-movie-title-poster
Jail movie poster

Trending News