தனது ரூட்டை மாற்றிய ஜிவி பிரகாஷ்.. சினிமா துறைக்கு கிடைத்த செல்லப்பிள்ளை

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ஏஆர் ரகுமானின் அண்ணன் மகனாகவும் அறியப்பட்டவர், அதன்பிறகு சர்ச்சைக்குரிய படங்களிலும் அடல்ஸ் படங்களிலும் தேடித் தேடி நடிக்கும் நடிகராகவே மாறியவர் ஜிவி பிரகாஷ்.

இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான செல்பி, 4ஜி, வாடிவாசல், சர்தார், யானை, மாறன், வாத்தி, ரிபெல், விசித்திரம் போன்ற படங்களும் இவருடைய நடிப்பில் வெளியாக உள்ளது.  அடுத்த ஆண்டு இவருடைய நடிப்பில் சூர்யா 41-வது திரைப்படம், அடங்காதே, ஆயிரத்தில் ஒருவன் 2, காதலிக்க யாருமில்லை, அநீதி ஆகிய படங்களில் வரிசையாக கமிட்டாகியிருக்கிறார்.

இப்படி ஜிவி பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான காலப்போக்கில் ஒரு முழுநேர ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார். எல்லாரிடமும் பக்கத்து வீட்டு பையன் போல் எதார்த்தமாக நடந்து கொள்வாராம்.

சம்பளமும் அதிகமாக கேட்க மாட்டார். நண்பர்கள் போல் வந்து நிறைய பேர் கதை சொல்லிவிட்டு செல்கிறார்களாம். புதுமுக இயக்குனர்களின் முதல் தேர்வு ஜிவி பிரகாஷ் தான். எளிதாக அவரை சந்திக்கலாம், சம்பளமும் அவ்வளவு அதிகமாக வாங்குவதில்லை.

இவர் கமிட்டாகி நடிக்கும் படங்களும் நஷ்டத்தை பெற்று தராமல் போட்ட காசுக்கு ஏற்று லாபத்தை பெற்றுத் தந்து விடுகிறது. அதனால் தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷுக்கு ஒரு தனி டிராக் உருவாகி வருகிறது.

எல்லா படங்களிலும் பிரச்சினை இல்லாமல் நடித்துக் கொடுப்பார். சம்பளத்தையும் டார்ச்சர் செய்து வாங்க மாட்டார். ஆகையால் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தற்சமயம் அடுத்தடுத்து வருவதுடன் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வரிசையாக அவருடைய வாச கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.