திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பட்ட பின் புத்தி தெளிந்த ஜி.வி… அண்ணன் காலியான திண்ண நமக்கு தான் என போடும் பிளான்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் தன்னுடைய 19 ஆவது வயதில் தமிழ் சினிமாவில் இசை பயணத்தை தொடங்கினார். முதல் படமான வெயிலில் இசையமைத்த பாட்டுக்கள் அத்தனையுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் இவருடைய சினிமா வாழ்க்கையின் வெற்றி என்பது திரும்பிப் பார்க்காத அளவிற்கு வளர்ந்து கொண்டே போனது. தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

இவரின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது. நன்றாக இசையமைத்துக் கொண்டு இருந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு திடீரென சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது தான் அவருடைய இசை வாழ்க்கைக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது என்று சொல்ல வேண்டும்.

Also Read:7 இசையமைப்பாளர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த படங்கள்.. இருந்தாலும் ராஜா மாதிரி யாரும் வரல!

சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்க ஆரம்பித்த ஜி.வி. பிரகாஷுக்கு ஏனோ தொடர்ந்து அத்தனை படங்களுமே அடல்ட் கன்டென்ட் ஆகவே வர ஆரம்பித்தது. இவரும் யோசிக்காமல் அத்தனை படங்களிலும் வரிசையாக நடித்து தள்ளினார். கடைசியில் பார்க்கும் பொழுது தமிழ் சினிமாவில் இசையால் எந்த அளவுக்கு பெயர் சம்பாதித்து வைத்திருந்தாரோ அது அத்தனையுமே நடித்த படங்களின் மூலம் டேமேஜ் செய்து வந்திருக்கிறார் என்பது அவருக்கு புரிந்தது.

ஒரு சில வருடங்கள் கழித்து இவர் அசுரன் திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். அத்தனை பாடல்களுமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் சினிமா ரசிகர்களும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக நிறைய பாடல்களை கொடுக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மேலும் ஜி.வி. மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பிடும் பொழுது சம்பளமும் கொஞ்சம் கம்மியாக வாங்கக் கூடியவர் தான்.

Also Read:மாணவிக்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல்.. குவிந்து வரும் பாராட்டுகள்.

இனி எத்தனை படங்கள் நடித்தாலும் பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ் தற்பொழுது மீண்டும் இசையில் கவனம் செலுத்த இருக்கிறார். அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார் இவர். தமிழில் தற்போதைக்கு பிசியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். அத்தனை முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைப்பாளராக இவர் தான் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார்.

அனிருத் தற்போது பயங்கர பிசியாக இருக்கிறார். அவருடைய கால்ஷீட் கிடைக்காமல் இயக்குனர்கள் எல்லோரும் திணறிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் ஜிவி பிரகாஷ். பிஸியாக இருக்கும் அனிருத்தால் பண்ண முடியாத படங்களின் வாய்ப்புகள் எல்லாம் இனி ஜிவி பிரகாஷுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஜிவி மீண்டும் இசையமைப்பாளராக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:நாரப்பாவால் அப்செட்டில் இருக்கும் ஜிவி.பிரகாஷ்.. ஆட்டைய போட்ட தெலுங்கு படக்குழு!

 

 

Trending News