வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

திருமணமான கையோடு சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த ஜிவி பிரகாஷ் நடிகை.. முன்கூட்டியே தெரிஞ்சிருச்சு போல

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சத்ய பிரபாஸ் இயக்கி தயாரித்த ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற திரைப்படத்தில் ஆதி-நிக்கி கல்யாணி ஜோடி சேர்ந்தவர்கள், தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு நிஜ தம்பதியர்கள் ஆக மாறி உள்ளனர்.

இவர்களும் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி போன்று நட்சத்திர தம்பதிகளாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இவர்கள் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், முதல் படத்திற்குப் பிறகு நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியானது.

இதை இவர்கள் இருவரும் ஒத்துக் கொள்ளாமலும் மறுக்காமலும் மௌனம் சாதித்த நிலையில், தங்களது காதல் உண்மை தான் என நிச்சயதார்த்தமும் அதைத்தொடர்ந்து மே 19 ஆம் தேதியன்று திருமணமும் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்திற்கு விஜய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வருகை தந்த வாழ்த்து தெரிவித்தனர்.

இன்னிலையில் ஜிவி பிரகாஷ் உடன் டார்லிங் அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹரஹர மஹாதேவகி, கலகலப்பு 2 உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த நிக்கி கல்யாணி திடீரென்று திருமணமான கையோடு சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

திருமணம் ஆன பிறகு கடைசியில் சின்னத்திரை தான் என முடிவெடுத்து இப்பொழுதிலிருந்து சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்காக வருகிறாரா எனவும் நெட்டிசன்கள் நிக்கி கல்யாணியை கிண்டல் அடிக்கின்றனர். இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக துவங்கவிருக்கும் ‘வெல்லும் திறமை’ என்ற என்ற ரியாலிட்டி ஷோ-வில் நடுவராக பங்கேற்க உள்ளார்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் புரோமோவில் பிரபல பாலிவுட் நடிகை பர்னீதி சோப்ரா தோன்றி நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக நிக்கி கல்யாணி வருகிறார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்களால் வைரலாகிறது.

Trending News