தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பாபா பாஸ்கர். நடன இயக்குனராக பணியாற்றியிருந்தாலும் இவருக்கு பிடித்த நடிகர் தனுஷ் என்பதை பலமுறை கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் கையத்தட்டு உண்டாச்சு உலகம், கொடி படத்தில் வேட்ட போட்டு கொண்டாடு டா மற்றும் மாரி படத்தில் தர லோக்கல் போன்ற பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன் பிறகு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கிலும் ஓரளவிற்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு படங்களில் கவனம் செலுத்த நினைத்துக்கொண்டிருந்த பாபா பாஸ்கர் திடீரென குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிவாங்கி, அஸ்வினுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ அதே போல் தான் பாபா பாஸ்கர் என தனி ரசிகர்கள் உருவாகினர். இவ்வளவு ஏன் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அருமையாக சமைக்க கூடியவர் பாபா பாஸ்கர் என ஜட்ஜ் சொல்லுமளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பாராட்டை பெற்றார்.
பாபா பாஸ்கர் நடன இயக்குனர் என்பது பல ரசிகர்களின் தெரியும். ஆனால் பாபா பாஸ்கர் ஜிவி பிரகாஷ் வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். அது எத்தனை பேருக்கு தெரியும்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற படத்தை பாபா பாஸ்கர் தான் இயக்கியுள்ளார். வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று சாதாரண வெற்றி மட்டுமே பெற்றது.