ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜிவி பிரகாஷ்-சை சங்கடத்தில் மாட்டி விட்ட பத்திரிக்கையாளர்.. நேர்த்தியான பதிலால் குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இசையமைப்பதோடு படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவான ஐங்கரன் படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது வெளியாக உள்ளது.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியாக படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையில் புதிய பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் இசையில் “பெருங்காற்று” என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பாடலின் அறிமுகவிழா சென்னை தி.நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி.பிரகாஷ், “சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் 12 மொழிகளில், பெருங்காற்றே என்ற பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் இந்தியாவின் 12 விளையாட்டு வீரர்கள் மற்றும் 12 நடிகர்கள் நடிக்கவுள்ளனர்” என கூறினார்.

gv-prakash-01
gv-prakash-01

தொடர்ந்து பேசிய அவர், மொழியா? தேசமா? என்றால், எனக்கு என் மொழிதான் முக்கியம், இரண்டாவது தான் தேசம் என கூறியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் இந்த பேச்சுக்கு, நெட்டிசன்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News