வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜிவி பிரகாஷுக்கு வில்லனாக நடிக்கும் காமெடி நடிகர்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் தற்போது கதாநாயகனாக படங்களில் கலக்கி வருகிறார். தற்போது இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தொடர்ந்து நல்ல கதை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராம் பாலா இயக்கம் படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். எப்போதுமே காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அந்த நடிகர் இப்போது முதல்முறையாக வில்லனாக நடிப்பதால் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

Also Read :விபூதியால் பிரச்சனையில் சிக்கிய விக்ரம், ஜிவி பிரகாஷ்.. பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சாண்டி

அதாவது வைகைப்புயல் வடிவேலுவிடம் தான் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கதாநாயகியாக வடிவேலு நடிக்கிறார். மேலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்த அடுத்த படங்களில் கமிட் ஆகி மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read :யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. 35 வருட தவத்தை கலைக்கிறார்

இதுவரை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு கன்டென்ட் கொடுத்து வந்த வடிவேலு டெரர் வில்லனாக ஜிவி பிரகாஷ் படத்தில் நடிக்கிறார். இதுவரை வடிவேலு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என கூறப்படுகிறது. காமெடி நட்சத்திரமாகவே பார்த்து வந்த வடிவேலு புது முயற்சியாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

இது மக்களை எந்த அளவுக்கு என்டர்டைன்மென்ட் செய்கிறது என்பது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும். மேலும் வடிவேலு வில்லனாக நடிக்க உள்ள விஷயம் தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Also Read :வடிவேலு குரலில் செம ஹிட்டடித்த 6 பாடல்கள்.. விஜய்யோடு பாட்டு ஆட்டம் என பின்னிய வைகைப்புயல்

Trending News