ஆரம்பத்தில் இளைஞர்களை கவர்வதற்காக படம் நடித்துக் கொண்டிருந்த ஜிவி பிரகாஷ், பாலாவின் நாச்சியார் படத்திற்கு பிறகு நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார்.
அந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பரத் நடித்த கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியுடன் இணைந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது வென்று அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இயக்குனர் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் தற்போது வரை பெட்டிக்குள் முடங்கி விட்டது.
இவ்வளவு ஏன் உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணேகலைமானே என்ற படத்தையும் எடுத்தார். அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிக்கும் கலைமகன் என்ற படத்தை இயக்க உள்ளார் சீனு ராமசாமி.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெயர்களில் டைட்டில் வைக்க பலரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சீனு ராமசாமி தன்னுடைய படங்களுக்கு தூய தமிழ் பெயர்களை வைத்து தமிழை அழியாமல் காத்து வருகிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.