கடலில் நடக்கும் அமானுஷ்யம்.. ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

kingston
kingston

Kingston Twitter Review: கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் கிங்ஸ்டன் இன்று வெளியாகி உள்ளது. திவ்யா பாரதி, சேத்தன், அழகம்பெருமாள் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கடலில் நடக்கும் அமானுஷ்யத்தை அட்வென்சர் திரில்லர் கலந்து சொல்லி இருக்கிறது படம். ட்ரைலரின் மூலம் கவனம் ஈர்த்த இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அதில் பலருக்கு படம் பிடித்திருக்கிறது. அதிலும் VFX காட்சிகள், இசை, ஜிவி பிரகாஷ் சேத்தனின் நடிப்பு என படத்தில் பல ப்ளஸ் இருக்கிறது.

ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு.?

அதேபோல் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சிறு தள்ளாட்டத்தில் இருக்கிறது. அதனால் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது என சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் வித்தியாசமான அனுபவத்தை தியேட்டரில் பெற முடியும் என்றும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதனால் இந்த பேண்டஸி முயற்சியை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம். ஜி வி பிரகாஷுக்கு இது 25 வது படம் என்பதும் கூடுதல் சிறப்பு.

Advertisement Amazon Prime Banner