ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஜிவி பிரகாஷ் பங்கம் செய்த வெற்றிமாறன்.. ரகசியங்கள் சொன்னா யாருக்குத்தான் கோபம் வராது

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி கொடி வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் இவர் இசையில் வெளியான படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றன.

ஜிவி பிரகாஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே வெற்றி பெறுவதற்கு ஒருபக்கம் வெற்றிமாறனின் கதை காரணமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் ஜிவி பிரகாஷின் இசையும் காரணமாக இருந்தது. இதனை யாரும் மறுக்க முடியாது.

அப்படி இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த நட்புக்குள் சற்று விரிசல் ஏற்பட்டதாக அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையை கூறிவரும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் கடுமையாக திட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

gv prakash
gv prakash

அதற்கு காரணம் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார். எப்போதும் வெற்றிமாறன் படத்தின் அப்டேட்களை படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளிப்படையாக கூறுவார்.

ஆனால் ஜிவி பிரகாஷ் வாடிவாசல் சம்பந்தப்பட்ட அப்டேட்களை தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தினமும் வெளியிட்டு வந்தது தான் இதற்கு காரணம் என கூறியுள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு விரிசலும் வராது என்பது அனைவருக்கும் தெரியும். ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் இந்த மாதிரி விஷயங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News