ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை மிஸ் செய்த முன்னணி நடிகரின் தம்பி.. கிரேட் எஸ்கேப்!

தமிழ் சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று திரிஷா இல்லைனா நயன்தாரா படம். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த இரண்டாவது படமும் இதுதான்.

டார்லிங் என்ற சூப்பர் ஹிட் அறிமுகப்படத்தை கொடுத்ததால் திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் படம் மொத்தமும் 18 பிளஸ் காட்சிகளாக இருந்தது.

trisha-ilana-nayanthara-cinemapettai
trisha-ilana-nayanthara-cinemapettai

இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் இந்தப் படம் செம வரவேற்பை பெற்று நன்றாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மனிஷா யாதவ் மற்றும் கயல் ஆனந்தி போன்றோர் நடித்திருந்தனர்.

அருவருப்பான காட்சிகள் அதிகமாக இருந்த இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். இவர்கள் கூட்டணியில் தற்போது காதலை தேடி நித்தியானந்தா என்ற படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தில் முதன் முதலில் முன்னணி நடிகரின் தம்பிதான் நடிக்க இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா. அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் என்பவர் தான்.

elvin-raghava-lawrance-brother
elvin-raghava-lawrance-brother

கதை கேட்டதும் அதிர்ந்து போன எல்வின் அறிமுகப் படம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒதுக்கி விட்டதாக கூறுகின்றனர். ஆனால் எல்வினுக்கும் ஆந்திராவை சேர்ந்த நடன பெண்மணி ஒருவருக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததும், அவரை எல்வின் ஏமாற்றி விட்டதாகவும் கூட சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending News