வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆர்ப்பாட்டமே இல்லாமல் பணத்தை வாரி இறைக்கும் ஜிவி பிரகாஷ்.. விட்டா அடுத்த சூர்யா இடத்தை பிடிச்சுருவாரு போல

Music Director GV Prakash: சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இவருக்கு என்று ஒரு இடத்தை குறுகிய காலத்தில் தக்கவைத்துக் கொண்டார். அதோடு இல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி நிறையப் படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்ற பாணியில் பல பெரிய படங்களை கையில் வைத்திருக்கிறார்.

அந்த வகையில் ராஜ்கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்துக்கு இவர் தான் இசையமைக்க இருக்கிறார். இரண்டு பேருமே மக்களிடையே எதிர்பார்க்கக் கூடிய பெரிய ஜாம்பவான்கள். அவர்களுடைய படத்தில் இசையமைக்கிறார் என்றால் கண்டிப்பாக அதன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் .

Also read: அனிருத்தை ஓரம்கட்ட வரும் ஜிவி பிரகாஷ்.. அடுத்தடுத்த படவாய்ப்பால் எடுத்த முக்கிய முடிவு

அது மட்டும் இன்றி சூர்யா, சுதா கொங்கரா இணையும் படத்திலும் இவர் தான் இசையமைக்கப் போகிறார். இவர் கமிட்டாகிய இந்த இரண்டு படங்களுமே ஆடியோ ரைட்ஸ் பொருத்தவரை பெரிய அளவில் பிசினஸ் ஆகியுள்ளது. அதனால் இரண்டு படங்களில் இருந்தும் கோடி கணக்கில் சம்பளத்தைப் பெறப் போகிறார்.

ஒரு வழியில் இப்படி சம்பாதித்து விட்டு, இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டமே இல்லாமல் பணத்தை நல்ல காரியங்களுக்கு வாரி வழங்கி வருகிறார். இவர் செய்த எந்த விஷயங்களும் வெளியில் தெரியாமல் கமுக்கமாக செய்வது தான் இவரை மிகவும் பாராட்டும் விஷயமாக இருக்கிறது.

Also read: அப்படி மட்டமா என்னால நடிக்க முடியாது.. ஜிவி பிரகாஷ் படத்தை ரிஜெக்ட் செய்ய வாணி போஜன் கூறிய காரணம்

எந்தவித விளம்பரமும் செய்யாமல் நல்லது மட்டுமே செய்யும் இவருடைய மனசு பெருசுதான். அதாவது நிறைய பள்ளிக்கூடங்களுக்கு மிக முக்கியமாக தேவைப்பட வேண்டிய விஷயம் என்றால் கழிவறை தான். அதை சரியான முறையில் யோசித்து பள்ளிக்கூடங்களுக்கு கழிவறை கட்டிக் கொடுத்து வருகிறார்.

அது மட்டுமின்றி பழங்குடி மக்கள் வாழ்விற்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவர்களுடைய குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அதற்கும் உதவி செய்து வருகிறார். இந்த மாதிரி இவர் செய்வதைப் பார்த்தால் சூர்யாவையே மிஞ்சிருவார் போல. எது எப்படி இருந்தாலும் இவர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக வருகிறது.

Also read: அப்படி மட்டமா என்னால நடிக்க முடியாது.. ஜிவி பிரகாஷ் படத்தை ரிஜெக்ட் செய்ய வாணி போஜன் கூறிய காரணம்

Trending News