செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகிபாபு.. மைக்கேல் ஜாக்சனுக்குப் போட்டியாக டான்ஸா?

சினிமாவில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் யோகி பாபு. அதன்பின், அரண்மனை படத்தில் சிறு கேரக்டரில் நடித்தார்.

நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து அசத்திய பின் எல்லோரின் கவனத்தையும் பெற்றார்.
அதன்பின், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், மண்டேலா படத்திற்குப் பல படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடி நடிகராக இருந்து, ஹீரோவான சந்தானம், சூரி ஆகியோரின் வரிசையில் யோகி பாபுவும் இடம்பிடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில், போட் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மண்ணாங்கட்டி, வானவன், ஜோரா கைய தட்டுங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ஜி.வி.பிரகாஷ் & யோகி பாபு

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவான யோகிபாபு முதன் முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகவுள்ளார். திருச்சியை சேர்ந்த இயக்குனர் டெல் கே. கணேசன் இயக்கும் இப்படத்தில் பிராண்டன் டி ஜாக்சன், ஜே.ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு டிராப் சிட்டி என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில், ஆங்கில பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப்போல யோகி பாபு டான்ஸ் ஆடும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே நடிகர் நெப்போலியனை, டெவில்ஸ் நைட் ; டான் ஆப் தி நைன் ரூஜ் என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் செய்த அவர், டிராப் சிட்டி படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் மற்றும் யோகி பாபுவை அறிமுகம் செய்து வைக்கிறார். இப்படம் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இசைத்துறையில் ஒரு இளைஞனின் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending News