சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மலையாளியுடன் மல்லு கட்டிய ஜிவி பிரகாஷின் ரெபல் ட்ரெய்லர்.. கலவர பூமியான நிஜ சம்பவம்

Rebel Trailer : ஜிவி பிரகாஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபகாலமாக அவருக்கு ஹிட் படங்கள் எதுவும் அமையாத நிலையில் இப்போது ரெபல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை நிகேஷ் இயக்கியுள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

மேலும் மமிதா பைஜூ, கருணாஸ், கல்லூரி வினோத் மற்றும் ஆதிரா போன்ற பிரபலங்கள் ரெபல் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மலையாளம் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சூழலில் கேரளாவில் தமிழனாக ஜி.வி. பிரகாஷ் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து ரெபல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கல்லூரி படிப்பதற்காக தன்னுடைய நண்பனுடன் கேரளாவுக்கு செல்கிறார் ஜிவி பிரகாஷ். அவர்களது அறிமுகமான பெயரில் இருந்தே பிரச்சனை தொடங்குகிறது.

Also Read : ஒரு டஜன் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய காத்திருக்கும் ஜிவி பிரகாஷ்..திணறும் டாப் ஹீரோக்கள்

மேலும் இவர்கள் தமிழனாக இருப்பதால் மலையாளிகள் அவர்களை ஏளனமாக பார்க்கிறார்கள். ஆனால் அதில் தன்னுடைய சக மாணவி ஒருவர் மட்டும் ஜிவி பிரகாஷ் மீது காதலில் விழுகிறார். அதன் பிறகு தமிழன்னா பிறந்தா தப்பா சார் என ஜிவி பிரகாஷ் கதறும் அளவுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதனால் ஆக்ரோஷமான அவர் மலையாளிகளுடன் மல்லுகட்டி வென்றாரா என்பதுதான் ரெபல் படத்தின் கதை. இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்து இருந்தது. இப்போது ரெபல் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read : தனுசுடன் மல்லுகட்ட போகும் நடிகர்… உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்

Trending News