செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கவர்ச்சியில் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ஜிவி பிரகாஷ் தங்கை! எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் தூள் கிளப்பி வருகிறார். அதேபோல் இவருடைய தங்கை பவானி ஸ்ரீ சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு இவருக்கு பாவ கதைகள் படத்தில் தங்கம் பகுதியில் நடித்திருப்பார். மேலும் இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடாத படத்தில் பவானி ஸ்ரீ கவர்ச்சிப் புயலாக களமிறங்க உள்ளதாக தகவல் கசிகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும், அதற்கான படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரித்து இயக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கான 8 பாடல்களை முடித்து கொடுத்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

bhavani-sri-cinemapettai

எனவே வெற்றிமாறனின் இயல்பான படைப்புகளில் இந்த படமும் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அதை போல் இந்த படத்தில் பவானி ஸ்ரீயை வேறு ஒரு கோணத்தில் இயக்குனர் வெற்றிமாறன் காண்பிக்க போவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

Trending News