வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்திற்கு கிடைத்த தரமான வில்லன்.. AK62 செதுக்கி வைத்திருக்கும் விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித் குமார் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு துணிவு என்று டைட்டில் வைத்து இருக்கிறார்கள். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடிக்கிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித்தின் துணிவு பட சூட்டிங் பாதியில் இருக்கும் போதே அவருடைய 62 வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படம் இதுவாகும்.

Also Read: 20 வருடங்களாக முருகதாஸை ஒதுக்கி வைத்துள்ள அஜித்.. பின்னணியில் இருக்கும் சம்பவம்

இப்போதெல்லாம் வழக்கமான வில்லன் கேரக்டர்களை விட, யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுசாக வில்லனை அறிமுகம் செய்வதே ட்ரெண்ட் ஆகி விட்டது. பேட்ட, மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சூர்யா என எதிர்பாராத வில்லன்கள் தான் இப்போது மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் இப்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்க போகிறவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதம் இப்போது ஒன்றிரண்டு படங்களில் தன்னுடைய தேர்ந்த நடிப்பை காட்டி வருகிறார். மேலும் சில கேரக்டர்களுக்கு டப்பிங் வாய்சும் கொடுக்கிறார்.

Also Read: நயன்-விக்கியின் திருமணத்தை நான் இயக்கவில்லை.. ஆவணப்படம் பற்றி விளக்கமளித்த கௌதம் மேனன்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவருடைய கேரக்டர் தி பெஸ்ட் என்று சொல்லலாம். இப்போது அஜித்துக்கு வில்லனாக போவதை இவரேதான் சொல்லியிருக்கிறார். கேரக்டர் கெட்டப் பத்தி இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை என்றும், வில்லன் ரோல் செட் ஆனால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வரும் ‘ அதாரு அதாரு’ பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன் தான். எனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

Also Read: தொடர்ந்து சரியும் நயன்தாராவின் மார்க்கெட்.. விக்கியால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நிலை

Trending News