ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்கள் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ அவருடன் நடிக்கும் நடிகைகள் மப்பும் மந்தாரமுமாக மிகவும் அழகாகவே இருப்பார்கள். அதனை பார்க்கவே பல ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படம் படையெடுக்கின்றனர். ஜிவி பிரகாஷ் படங்களில் நெருக்கமான காதல் காட்சிகள் அதிகம் உண்டு.
அந்த வகையில் தளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஒருவருடன் புதிய படமொன்றில் ஜோடி போட்டுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இவரையும் விட்டு வைக்கவில்லையா என ஜிவி பிரகாஷை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக இசையமைப்பாளர்கள் பலரும் ஹீரோவாக தங்களது சினிமா வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதிக்கே டப் கொடுக்கும் வகையில் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
வருடத்திற்கு கிட்டதட்ட ஐந்து முதல் ஆறு படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி வருகிறது. ஆனால் அதில் வெற்றிப் படங்களின் சதவிகிதம் மிகக் குறைவுதான். இருந்தாலும் ஜிவி பிரகாஷுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் காமெடி இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்பட்ட எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புஷ்பா புகழ் ரேஷ்மா பசுபுலேட்டி, ஆனந்தராஜ், டேனியல் போப் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
