செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ஜோவிகா ஏன் அந்த ஜிம்க்கு தனியா போறா, பெட்ரூம்ல கம்மல்.. ட்ரெயினருடனான அந்தரங்கத்தை அவிழ்த்து விட்ட காதலி

Jovika Vijaykumar: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்ப ஆரம்பிக்கப்பட்டதோ, அதிலிருந்து தமிழ்நாட்டில் நடக்கும் பாதி சம்பவங்களில் இதில் பங்கேற்ற போட்டியாளர்களின் பெயர் சிக்கிக் கொள்கிறது. ஒரு வேளை, இப்படிப்பட்ட ஆட்களை தான் அந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது அந்த நிகழ்ச்சிக்கு போய் வந்த பிறகு தான் இவர்களுக்கு சிக்கல்கள் ஆரம்பிக்கிறதா என தெரியவில்லை. அப்படித்தான் சமீபத்திய சர்ச்சை ஒன்றில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் சிக்கி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல ஜிம் டிரைனர் மணி என்பவரின் காதலி ஒருவர் அவர் மீது போலீசில் புகார் கொடுத்ததோடு, யூடியூப் சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து இருந்தார். அதில் மணி நிறைய பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், அதை தட்டி கேட்ட தன்னை உடல் அளவில் காயப்படுத்தியதாகவும் சொல்லியிருந்தார். அத்தோடு அது சம்பந்தப்பட்ட நிறைய ஆதாரங்களையும் காட்டி இருந்தார்.

இப்போது இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அந்த பாதிக்க பட்ட பெண்ணோடு மணியின் முன்னாள் மனைவி கவிதா என்பவரும் இணைந்திருக்கிறார். மணி தன்னுடைய ஜிம்முக்கு வரும் பெண்களை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியதாகவும், இதை தட்டிக்கேட்ட என்னை பல வருடங்களாக அடித்து துன்புறுத்தி இருக்கிறார் என்றும் அந்தப் பெண் யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

Also Read:திரிஷா, நயன்தாரா இடம் எனக்குத்தான்.. வனிதா ஊதும் மகுடிக்கு ஆடும் ஜோவிகாவின் வைரல் போட்டோஸ்

மணிகண்டனின் ஜிம்முக்கு நிறைய சினிமா பிரபலங்கள் தான் செல்வது வழக்கம். அப்படி அந்தப் பெண்கள் மணியிடம் பேசிப் பழக சந்தர்ப்ப சூழ்நிலை அமையும் போது அதை தனக்கு சாதகமாக அவர் மாற்றிக் கொள்கிறாராம். அந்த பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் விழ வைப்பதோடு, அவர்களிடமிருந்து பணத்தையும் ஏமாற்றி வாங்குவது தான் மணியின் தொழில் என அவருடைய முன்னாள் மனைவி கவிதா மற்றும் காதலி சந்தியா அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் மணிக்கு பிக் பாஸ் பிரபலம் ஒருவரோடு தொடர்பு இருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி கவிதா சொல்லி இருக்கிறார். கவிதா வெளியில் சென்று இருந்த சமயத்தில் அவர்களுடைய பெட்ரூமில் அந்த பிக் பாஸ் பிரபலத்தின் கம்மல் இருந்ததாகவும், அதை தட்டி கேட்டதற்கு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லி இருக்கிறார். பின்னர் கவிதா எடுத்த முயற்சியினால் அந்த பிக் பாஸ் பிரபலம் மணியை விட்டு விலகி விட்டதாகவும், இப்போது அவருடைய பெயரை சொல்லி சொந்த வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கவிதா சொல்லி இருக்கிறார்.

மணி நடத்தும் ஜிம்முக்கு போகும் பெண்களை எச்சரித்திருக்கும் கவிதா மற்றும் சந்தியா இதுபோன்ற தப்பானவர்களுடன் ரிலேஷன்ஷிப் இருந்தால் அதிலிருந்து உடனே வெளிவந்து விடுங்கள் என அறிவுரையும் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகா இப்போது அந்த ஜிம்முக்கு போய்க்கொண்டிருப்பதாகவும், ஜோவிகாவை தனியாக அந்த ஜிம்முக்கு அனுப்பாதீர்கள் என்றும் அந்த பேட்டியின் மூலம் எச்சரித்து இருக்கிறார்கள்.

Also Read:அடுத்த நமிதா ரெடி.. வயசுக்கு மிஞ்சிய போட்டோ ஷூட் நடத்தும் ஜோவிகா

Trending News