தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தந்தை போலீஸ் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அவர் இறந்ததை நினைத்து சிவகார்த்திகேயன் பல மேடைகளில் கண்ணீர் விட்டுள்ளார்.
ஆனால் எப்படி இறந்தார் என்ற செய்தி தற்போது வரை யாருக்குமே தெரியாமல் மௌனம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த எச் ராஜா என்பவர் சிவகார்த்திகேயனின் தந்தை படுகொலை செய்யப்பட்டார் என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ். காவல்துறை அதிகாரியான அவர் இயற்கையான முறையில் தான் மரணமடைந்தார். ஆனால் எச் ராஜா சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எச் ராஜா சமீபத்தில், ஜெயிலராக இருந்த ஜெயபிரகாஷ் என்பவரை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடைய மகன்தான் இன்று சினிமாவில் நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயன் எனவும் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் எது பேசினாலும் நடிகர்கள் அமைதியாக போவார்கள் என்பதற்காக தேவையில்லாமல் சிவகார்த்திகேயனை பற்றி ராஜா பேசியுள்ளார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தன்னுடைய வெற்றியை பார்க்க தந்தை கூட இல்லையே என நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை மேலும் கஷ்டப்படுத்தும் விதமாக எச் ராஜா கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
