வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மனோபாலா இறப்பில் முதல் ஆளாக வந்து கதறிய H. வினோத்.. இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தமா

சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முக திறமையை கொண்டவர் தான் மனோபாலா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு பலரும் அவர்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தார்கள். அத்துடன் சக நடிகர்கள் இவருடைய வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் சினிமா பிரபலங்களான சுகாசினி, வையாபுரி, உதயநிதி மற்றும் விஜய் போன்ற பலரும் அவருடைய வீட்டிற்கு சென்று மனோபாலாவை பார்த்து வந்தார்கள். அடுத்ததாக இவர் இறந்த செய்தியை கேட்டதும் இயக்குனர் எச் வினோத் அவருடைய வீட்டிற்கு சென்று மனோபாலாவை பார்த்து ரொம்பவே கதறி அழுத்திருக்கிறார். இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இவருடைய அழுகை இருந்திருக்கிறது.

Also Read: பட்டதற்கு பின் புத்தி தெளிந்த மனோபாலா.. இனி இதை மாதிரி யாரும் செய்யாதீங்க என கடைசியா கொடுத்து அட்வைஸ்

அதாவது இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்றால் எச் வினோத் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னாடி கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து மிகவும் கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார். அப்பொழுது அங்கே கோலி சோடா படபிடிப்பு நடைபெற்று இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் இப்படத்தின் இயக்குனரான விஜய் மில்டனிடம் எச் வினோத் அறிமுகமாய் இருக்கிறார்.

அப்பொழுது எச் வினோத்துக்கு சினிமாவில் இருக்கும் ஆர்வத்தை பார்த்து பார்த்திபனிடம் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் அவர் மனோபாலாவை சந்தித்திருக்கிறார். அப்பொழுது மனோபாலாவிடம் ஒன் லைன் ஸ்டோரியாக கதை சொல்லி இருக்கிறார். இதை கேட்ட மனோபாலா கதை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

Also Read: விஜய், மனோபாலா காம்போவில் குறும்புத்தனமான 5 ஹிட் படங்கள்.. மன்சூர் அலிகான் உடன் செம ரகளை

நீங்கள் மேற்கொண்டு படத்தை எடுப்பதற்கு தயாராகுங்கள். அதற்கு எவ்வளவு செலவாகுதோ அந்த மொத்த பணத்தையும் நான் தருகிறேன் என்று அவர் எடுத்த படத்திற்கு தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். அப்படி எச் வினோத் இயக்கி, மனோபாலா தயாரித்த படம் தான் சதுரங்க வேட்டை. அதே மாதிரி இப்படம் மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை பெற்று அதிக லாபத்தையும் கொடுத்தது.

அதன் பிறகு எச் வினோத் வேற லெவல்ல மாறிவிட்டார். தற்போது இவர் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருக்கிறார். இப்படி இவருக்கு வாழ்க்கை தந்த குருவாக மனோபாலாவை தான் மனதில் நினைத்திருக்கிறார். அதனால் தான் அவருடைய இறப்பை கேட்டதும் முதல் ஆளாக ஓடோடி மனதார வருத்தப்பட்டு கண்ணீர் சிந்திக்கிறார். இப்பொழுது தான் புரிகிறது இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தம் இருக்கிறது என்று.

Also Read: மனோபாலாவுக்காக கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய்யின் புகைப்படம்

Trending News