புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு வருஷமாக ஏமாற்றிய கமலால் மன உளைச்சலில் H.வினோத்.. கர்ணனுக்கு ரூட் போட்டு வாங்கிய கிரீன் சிக்னல்

H Vinoth and Dhanush’s film is slated to go on floors in June: தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஹச் வினோத். பலமான திரை பின்புலம் இல்லாமல் சினிமாவில்  வாய்ப்பு தேடி திரிந்த நிலையில் சதுரங்க வேட்டை வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் ஹச் வினோத்.

சினிமாவில் கஷ்டப்பட்டு திரைக்கதை உருவாக்கி அதை இயக்கி வெளியிடும்போது அந்த கதை என்னுடையது என கொடி பிடிக்க பலர் வருவதுண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் செய்தித்தாளில் வரும் பல்வேறு குற்றப் பின்னணிகளை அடிப்படையாக வைத்து சாமானியனுக்கும் புரியும் வகையில் திரைக்கதையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஹச் வினோத்தின் ஸ்பெஷல்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் அஜித்துடன் இணைந்த ஹச் வினோத் அவர்கள் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான துணிவு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து கமல் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ஹச் வினோத்திற்கு கொடுத்தார்.

Also read: ரகசியமாய் அடிக்கடி அமெரிக்கா செல்லும் கமல்.. காஸ்டியூம் டிசைனருடன் இப்படி ஒரு கூட்டணியா?

இதன் காரணமாக அனைத்து பணிகளிலும் இருந்தும் விலகி கமலின் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என KH233க்கு  தீவிரமாக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினார், திரைக்கதையைக் கேட்டவுடன் கமல் உடனே ஓகே சொல்லி KH233 தொடங்குவதாக இருந்தது. அதே சமயம் மணிரத்தினத்தின் கதைக்கும் வெயிட்டிங் கார்டு போட்டு வைத்திருந்த கமல் இருவரின் கதைகளும் வேறு வேறு பாணியில் பயணிப்பதாக கூறி ஹச் வினோத்தை காக்க வைத்து விட்டார்.

ஒரு வருட காத்திருப்பிற்கு பின் விரக்தி அடைந்த ஹச் வினோத்தோ தானே விலகுவதாக  கூறி தனது வெற்றி படமான தீரன் அதிகாரம் 2 அடுத்த பாகம், யோகி பாபுவுடன் ஒரு கதை, தனுசு உடன் ஒரு கதை என தீவிரமாக கதை சொல்ல கிளம்பி விட்டார்.

புதுமையான திரைக்கதையுடன் வெற்றி பெற வைக்கும் சாணக்கிய தந்திரத்துடன் கதை சொல்லிய ஹச் வினோத்தின் கதையில் இம்ப்ரஸ் ஆகிப்போனார் நம்ம கலியுக கர்ணன் தனுஷ். ஆம் தனுஷிடம் இருந்து கிரீன் சிக்னல் வர உடனே ப்ரீப்ரோடக்ஷன் பணிகளை துவங்கி உள்ளார் வினோத். தனுஷ் தற்போது சேகர் கம்லாவின் D51 என்ற படத்தில் நடித்து வருகிறார்.  ஹச் வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Also read: திருப்பதியில் இருந்து துரத்தி விடப்பட்ட தனுஷ் படப்பிடிப்பு.. விசுவாசிகள் செய்த வேலையால் வந்த விளைவு

Trending News