புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நம்ப வச்சு கழுத்தறுத்த ஆண்டவர்.. எச் வினோத்துக்கு வந்த திடீர் ஞானோதயம்

Kamal-H.Vinoth: ஆண்டவர் இப்போது பிக்பாஸில் பிஸியாக இருக்கிறார். அது இல்லாமல் தயாரிப்பு, நடிப்பு, அரசியல் என நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு சுழன்று கொண்டிருக்கிறார். ஆனாலும் இன்னும் சில படங்களை கமிட் செய்யவும் அவர் முயற்சித்து வருகிறார்.

இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும் எச் வினோத்தை பொறுத்தவரை திண்டாட்டமாக தான் இருக்கிறது. அந்த வகையில் மணிரத்னம் படத்திற்கு முன்பே KH 233 ஆரம்பித்து விடும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் 234வது படமான தக் லைஃப் டைட்டில் வீடியோ வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்ப வினோத் கூட்டணி இருக்கா இல்லையா என்ற ஒரு குழப்பமும் இருந்தது. அந்த வகையில் இப்போது கமல் வினோத்தை கடைசி பெஞ்சுக்கு தூக்கி போட்டு விட்டாராம். அதாவது தெலுங்கில் கல்கி, தமிழில் இந்தியன் 2, தக் லைஃப் முடிந்த பிறகு தான் வினோத்தின் படம் ஆரம்பிக்கும் சூழ்நிலையில் இருக்கிறதாம்.

Also read: அக்கடதேசத்தில் துரத்தி அடிக்கப்பட்ட கமல்.. பல வருடங்கள் மறைக்கபட்ட மாஃபியா கும்பலின் ரகசியம்

கிட்டத்தட்ட ஒரு வருஷமாக கமல் பின்னாடியே சுற்றி வந்த வினோத்துக்கு இது பேரதிர்ச்சியாக தான் இருக்கிறது. இப்படி நம்ப வச்சு ஆண்டவர் கழுத்தறுத்து விட்டார் என்ற கவலையில் அவருக்கு திடீர் ஞானோதயமும் பிறந்துள்ளதாம். அதன்படி தற்போது கமலுடன் ஒரு சந்திப்பையும் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

அதில் இப்படம் தாமதமாகும் என்றால் வேறு ஒரு படத்தை முடித்துவிட்டு வந்து விடுகிறேன் என்பதை அவர் தெளிவாக பேச இருக்கிறாராம். அதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்மதிக்கும் பட்சத்தில் அது தனுசுடன் இணையும் கூட்டணியாக இருக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக மொத்தம் அஜித்துடன் நான்கு வருடம் பயணம் செய்த வினோத் கமலுடன் எத்தனை வருடம் செலவிடப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால் இவர்களுடைய கூட்டணி 2025 இல் தான் தொடங்கும் என்பது தற்போது உறுதியாக தெரிகிறது. இப்படி ஒரு ஹிட் இயக்குனரை கமல் வெச்சி செய்து வருவது விமர்சிக்கப்படும் வருகிறது.

Also read: கமல் கெஞ்சியும் நடிக்க மறுத்த நடிப்பு அசுரன்.. கடைசிவரை நிறைவேறாமல் போன ஆசை

Trending News