வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல் கைவிட்டாலும் எச்.வினோத்துக்கு அடித்த ஜாக்பாட்.. 51வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட கேப்டன்

H.Vinoth hit the jackpot even though Kamal gave up: சினிமாவில் கமலின் பயணங்கள் மற்ற நடிகர்களுக்கு அப்பாற்பட்டு தான் இருக்கும். கமர்ஷியல் ஆகவும், மாசாகவும் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. நான் நடித்த படங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் சாதனை படமாக திகழ்ந்து நிற்க வேண்டும் என்று மனதில் வைத்து ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஆனால் இது பல இடங்களில் இவருக்கு வசூல் ரீதியாக தோல்வியடைந்து இருக்கிறது. ஆனாலும் அதை பற்றி பெருசாக கவலை கொள்ளாமல் தொடர்ந்து இவருடைய இலக்கை நோக்கி பயணித்து வந்தார். இதனால் இடைப்பட்ட காலத்தில் கமல் எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு காணாமல் போயிருந்தார்.

அந்த சமயத்தில் தான் லோகேஷ் மூலம் இவருக்கு விக்ரம் படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்து வசூல் ரீதியாகவும் வெற்றியை பார்க்க ஆரம்பித்தார். அதிலிருந்து கமலுக்கு இதே ரூட்டை ஃபாலோ பண்ணலாம் என்று ஒரு எண்ணம் வந்துவிட்டது. அதனால் அதற்கு தகுந்த படங்களையும் கதைகளையும் தேர்வு செய்து வருகிறார்.

Also read: ரஜினி, கமல் சேர்ந்து ஐந்து ஸ்டார்கள் உடன் நடித்த நடிகை.. 50 ஃப்ளாப் கொடுத்த சோகம்

இதனால் தான் எச் வினோத் கூட்டணியில் ஒரு படம் பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் வாக்குறுதி கொடுத்த நாளிலிருந்து இப்பொழுது வரை கமலிடமிருந்து எந்தவித பதிலும் சரியாக வரவில்லை. ரொம்ப காலமாகவே படம் பண்ணலாம்னு எச் வினோத்துக்கு ஆசை காட்டி இழுத்தடித்தார்.

பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் கமலுக்கு எச் வினோத் கூட்டணியில் படம் பண்ணுவதற்கு விருப்பமில்லாமல் போய்விட்டது. இதனால் எச்.வினோத்தை கமல் கைவிட்டு விட்டார். இதனை தெரிந்து கொண்ட எச்.வினோத் ஒரு கட்டத்துக்கு மேலே அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அந்த வகையில் தற்போது தனுசுக்கு கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டார்.

மேலும் தனுஷ் தற்போது அவருடைய இயக்கத்தில் நடித்து வரும் 50வது படத்தை முடித்த பின்பு இதை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அத்துடன் எச் வினோத்துடன் படம் பண்ணுவதற்கு இரண்டு மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷின் 51 ஆவது படம் எச் வினத்துடன் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகப் போகிறது. அந்த வகையில் திறமை இருந்தால் எப்பொழுதும் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப கமல் கைவிட்டாலும் தனுஷ் மூலமாக எச். வினோத்திற்கு ஜாக்பாட் அடித்து விட்டது.

Also read: சென்டிமென்ட்டா வெற்றி பாதைக்கு ரூட் போட்ட கமல்.. அமரன்னு பெயர் வைக்க இதுதான் காரணம்

Trending News