செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நோ சொன்ன ஆண்டவர் பதிலடி கொடுத்த எச்.வினோத்.. கமலுக்கு பதில் இப்ப யார் ஹீரோ தெரியுமா?

எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் தற்பொழுது அனைத்து திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இவரின் கதைக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகிருக்கு. இதே அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் வகையில் நிறைய படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் கதையை வைத்துக்கொண்டு யோசிக்கும் போது திறமையான முன்னணி ஹீரோக்கள் இவர் நினைவில் வந்திருக்கிறார்கள்.அந்த வரிசையில் தற்பொழுது கமல் தனுஷ் என இரண்டு ஹீரோக்களை தேர்ந்தெடுத்து கதை சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு ஹீரோகளும் இப்பொழுது பிஸியாக இருப்பதால் இவரிடம் கதையை மட்டும் கேட்டுவிட்டு எந்த பதிலும் சொல்லவில்லை.

Also read: அஜித் பற்றி உண்மையை போட்டு உடைத்த ஹெச்.வினோத்.. கல்யாண் மாஸ்டருக்கு ஆச்சரியத்தை கொடுத்த AK

இவர் என்னதான் தொடர்ந்து படங்களை ஹிட் கொடுத்தாலும் இவரின் கதைக்கு சரியாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. பின்பு கமலிடம் சென்று என்ன சார் படம் பண்ணலாமா அப்படின்னு கேட்டபோது அவர் இந்தியன் படத்தில் பிசியாக இருப்பதே சொல்லி இருக்கிறார். அதை முடித்த பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் முழு கவனம் செலுத்துவதாக சொல்லி வினோத்திற்கு நோ சொல்லிவிட்டாராம்.

இதை சற்றும் எதிர்பாராத வினோத் இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது கதையை கொண்டு தனுஷிடம் சென்று கதை சொல்லி இருக்கிறார். அவரும் கதை கேட்ட பிறகு இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நான் பண்றேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: இமயமலை என தெரியாமல் மோதிப் பார்த்த 2 திமிங்கலங்கள்.. விஜய், அஜித் சேர்ந்து கூட தொட முடியாத ரஜினியின் முதல் நாள் வசூல்

அந்த வகையில் கமலை வைத்து இயக்குவதற்கு வாய்ப்பில்லை என்று முடிவு பண்ணிய வினோத். இவருக்கு அடுத்தபடியாக இவரின் கதைக்கு தனுஷை வைத்து இயக்கப் போகிறார். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் தன்னை உதாசீனப்படுத்திய கமலுக்கு பதில் சொல்லவிருக்கிறார். தற்பொழுது இதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார்.

மேலும் முந்தைய படமான துணிவு படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாகவும் தனது அடுத்த படத்தை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று கடவுளை தரிசனம் செய்ய தற்பொழுது சபரிமலை சென்று இருக்கிறார்.

Also read: செல்வராகவனை எச்சரித்த தம்பி.. ஸ்டேட்டஸை காப்பாற்ற நினைக்கும் தனுஷ்

Trending News