சமீப காலமாக, விஜய் கோட் படத்தோடு சினிமாவிற்கு மூழுக்கு போடுகிறார், விஜய்யின் அடுத்த படம் எண்ணிக்கையில் 69. அந்த படம் விஜய் நடிக்க மாட்டார் முழு நேர அரசியல் பிரவேசம் எடுக்கவிருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது.
தற்சமயம் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அந்த படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கும் எச் வினோத். விஜய் 69 படம் கூடிய விரைவில் சூட்டிங் ஆரம்பிக்கப் போகிறது. இந்த படத்தை விஜய் எல்லோரும் ரசிக்கும்படி, ஒரு நடுநிலையாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.
இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பிக்கவிருக்கிறது. ஏனென்றால் அக்டோபர் இறுதிக்குள் படங்களை எல்லாம் முடிக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் கட்டளை போட்டு இருக்கிறது. அதன் பிறகு காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போகிறார்கள்.
ஸ்டிரைக் தொடங்கும் முன் தளபதி போடும் ஸ்கெட்ச்
ஒருவேளை ஸ்ட்ரைக் ஆரம்பித்து விட்டால் பழைய படங்கள் முடிப்பதற்கு கால அவகாசங்கள் கொடுப்பார்கள். புது படங்களுக்கு தான் பிரச்சனை ஏற்படும் என்று விஜய் 69 படத்துக்கு பிள்ளையார் சுழி போட ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதனால் இது திட்டமிட்டபடி அக்டோபர் 4ஆம் தேதி சென்னையில் சூட்டிங் ஆரம்பிக்க போகிறது.
இந்த படத்திற்காக விஜய் 4 மாதங்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். அனைத்து தரப்பு மக்களும் இதை விரும்பும் படி கதை அமைக்க சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இதன் ஒன்லைன் ஸ்டோரி தளபதியை மிகவும் கவர்ந்துள்ளதாம் இதனால் ஒரு கமர்சியல் கலந்த அரசியல் படம் வேண்டும் என்று டெவலப் பண்ண சொல்லி இருக்கிறார் விஜய்.
- அரசியல், சினிமா என இருதலைக்கொல்லியாய் மாறிய விஜய்.
- விஜய் 69 க்கு மல்லுக்கட்டும் தயாரிப்பு நிறுவனங்கள்
- மல்டி ஸ்டார் கூட்டணியில் உருவாகும் தளபதி 69