வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆண்டவர நம்பி பிரயோஜனம் இல்ல.. கார்த்தியிடம் சரண்டரான வினோத்

Kamal-H Vinoth-Karthi: துணிவு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வினோத் அடுத்ததாக கமலுடன் இணைய இருக்கும் அறிவிப்பு வெளியானது. ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இந்த கூட்டணியின் அடுத்த கட்ட அப்டேட்டை தான் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் மணிரத்தினம் கூட்டணியின் தக் லைஃப் பட டைட்டில் டீசர் வெளியாகி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அப்படி என்றால் வினோத்தின் நிலைமை என்ன? என அதிர்ச்சி குரல்களும் ஒலித்தது. ஏனென்றால் இந்த ப்ராஜெக்ட்டுக்காக அவர் மாதக்கணக்கில் காத்திருக்கிறார்.

ஆனால் கமலோ அரசியல், பிக்பாஸ், இந்தியன் 2 என பிசியாகிவிட்டார். இதில் இந்தியன் 2 இதோ அதோ என்று இழுத்துக் கொண்டே போகிறது. தற்போதைய தகவல் படி அதன் மூன்றாம் பாகமும் வர இருக்கிறது. அதில் தான் ஆண்டவர் இப்போது பிஸியாகி இருக்கிறார்.

Also read: நன்றியே இல்லாமல் அமீரை அசிங்கப்படுத்திய திரிஷா.. சூர்யாவுடன் நடிப்பதற்காக பச்சோந்தியாக மாறிய குந்தவை

இதனால் நொந்து போன வினோத் இதற்கு மேலும் காத்திருப்பதில் பிரயோஜனம் இல்ல என கார்த்தியிடம் சரண்டர் ஆகி விட்டார். அதன்படி இவர்களின் கூட்டணியில் தீரன் அதிகாரம் இரண்டு உருவாக இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளும் நடைபெற்று வருகிறது. தற்போது கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் 26 ஆவது படத்திலும், பிரேம்குமார் இயக்கத்தில் 27வது படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து அவர் வினோத்துடன் இணைய இருக்கிறார். முன்னதாக கைதி 2 உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோகேஷ் இப்போது தலைவர் 171 ஸ்கிரிப்டில் பிஸியாக இருக்கிறார். அதனாலேயே இப்போது கார்த்தி வினோத் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Also read: உலக நாயகனிடம் காதலால் மயங்கி கிடந்த 6 நடிகைகள்.. மரணப்படுக்கையில் பார்க்க துடித்த ஹீரோயின்

Trending News