இராணுவத்தில் அழிந்தவர்களைவிட ஆணவத்தில் அழிந்தவர்கள் தான் அதிகம் என ஒரு சொலவடை கூறுவார்கள் அல்லவா? அது சினிமாவிற்கு தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் சினிமாவை பொருத்தவரை தன்னடக்கம் மிகவும் முக்கியம். சற்று ஆணவமோ, தலைக்கனமோ காட்டினால் போதும் நம்மை தூக்கி எறிந்துவிடுவார்கள்.
சமீபத்தில் கூட இளம் நடிகர் அஷ்வின் மேடையில் திமிராக பேசினார் என கூறி அவரை வச்சு செய்தார்களே. பாவம் அந்த பையன் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டார். சரி நம் விஷயத்திற்கு வருவோம். இதுவரை நான் தான் எல்லாம் என ஆணவத்தில் ஆடி வந்த நடிகர் தற்போது அவர் மனதை மாற்றி கொண்டாராம்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகராக வளர்ந்துள்ளவர் தான் அந்த நடிகர். குழந்தையில் இருந்தே சினிமாவில் வளர்ந்ததால் அவருக்கு நடிப்பு அத்துப்படி. சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் என்றும் கூறுவார்கள். இருப்பினும் மனுஷன் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றார்.
ஆனால் இவர் சிக்காத சர்ச்சைகளே கிடையாது. இதுவரை வெளியான அனைத்து சர்ச்சைகளிலும் சிக்கி பெயரை டோட்டல் டேமேஜ் செய்து வைத்திருந்தார். அதுமட்டுமல்ல ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி அளித்து வந்துள்ளார். இவரின் இந்த செயலால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கடுப்பில் இருந்தனர்.
இதனால் அந்த நடிகர் பல பட வாய்ப்புகளை இழந்தார். ஒரு கட்டத்தில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பலனாக சமீபத்தில் ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து விட்டார். இந்நிலையில் நடிகர் திடீரென ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.
அதன்படி இனிமேல் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக பாதி தொகையை மட்டும் வாங்கலாம் என முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன்பு வரை அதிக சம்பளம், வீட்டிற்கு தனி, தனக்கு தனி என சம்பளம் வாங்கி வந்த நடிகரின் இந்த திடீர் மன மாற்றத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.